அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

10/31/2018 5:10:36 PM

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

மொழி

See Vs Seeing  Part 2

லன்ச் முடிச்சுட்டு வந்த ரகுவை பாதி வழியிலேயே நிறுத்திய ரவி,‘‘சார், ‘see’ என்ற வார்த்தையின் பல்வேறு விதமான அர்த்தங்களைப் பற்றி அலசிக்கொண்டிருக்கும்போது, Time up. See you later’ என்றவாறே திடீர்னு எழுந்து போய்ட்டீங்களே. இப்பயாவது தொடர்வீங்களா சார்?” என்றான்.

ரவியைப் பார்த்த ரகு, ‘‘Oh! Sure. You will see them now”என்று சொல்லிவிட்டு, ‘‘விட்ட இடத்திலிருந்தே தொடரலாமா?’’ என்று சொல்லி ஆரம்பித்தார்.
8. spend time (அளவளாவுதல்)- (often used in progressive tense) (பெரும்பாலும் தொடர்வினைச்சொல்லாய் பயன்படுத்தப்படுகிறது)They have been seeing a lot of each other recently. (சமீபகாலமாகவே ரெண்டுபேரும்  ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க.) 9. understand (புரிந்து கொள்ளுதல்)- I see some reason in it. (சரியான காரணமிருக்கறதாதான் எனக்குப் படுது) Can’t you see, he is taking advantage? (உன்னை வச்சு அவன் நிறைய சாதிச்சிக்கிறான்னு உனக்கு புரியலயா?) 10. have opinion (புதிய பரிமாணம்)- After receiving your advice, I am able to see things differently now. (உங்களது அறிவுரையைக் கேட்டபின், இப்ப பார்க்கும் ஒவ்வொன்றும் வித்தியாசமாக எனக்குப் படுகிறது.

11. Imagine: (நிர்மாணித்தல்) They see him as a future MD.(அனைவரும் அவனை அடுத்த எம்டி யாகவே பார்க்கின்றனர்)
12. Find out - (கண்காணித்தல்)Some thing is wrong. Please see to it.(என்னமோ தப்பு நடக்குது. கொஞ்சம் என்னான்னு பாரு)  
13. consider (கருத்தில் கொள்ளுதல்)- Let me see whether I can help you! (பார்க்கலாம். என்னால உனக்கு உதவி செய்ய முடியுமான்னு பார்க்கலாம். 14. make sure (உறுதி செய்தல்) - See that all the works have been done perfectly. (எல்லா வேலையும் சரியா நடக்குதான்னு பார்த்துக்கோ. 15. Experience - He will not worry about this because in his life he has seen a lot such. (இதப்பத்தி எல்லாம் அவன் கவலைப்பட மாட்டான். ஏன்னா இந்த மாதிரி பிரச்னைகளை அவன் வாழ்க்கைல எவ்வளவோ பார்த்திருக்கான்) இம்மாதிரி ஏகப்பட்ட அர்த்தங்கள் உள்ளன.

பார்வையின் ஒருமித்தசொற்கள் (சினானிமஸ்- synonymous) பயன்பாடு தெரியுமா? 1.anticipate, 2.comprehend, 3.consult, 4.contemplate, 5.examine, 6.eye, 7.foresee, 8.gape, 9.gawk, 10.gawp, 11.gaze, 12.glance, 13.glimpse, 14.glare, 15.grasp, 16.imagine, 17.look, 18.look at, 19.look in, 20.look out, 21.meet, 22.notice, 23.observe, 24.peek, 25.peep, 26.peer, 27.refer, 28.scan, 29.see, 30.see to, 31.seek, 32.sight, 33.spot, 34.squint, 35.stare, 36.view, 37.visit, 38.visualize, 39.watch ஆனால் இவையனைத்தையும் எங்கு, எப்படிப்  பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி மீண்டும் பார்க்கலாம். See you later!’’ என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்

X