வாசிக்க வேண்டிய வலைத்தளம் : www.youturn.in

11/5/2018 2:25:16 PM

வாசிக்க வேண்டிய வலைத்தளம் : www.youturn.in

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பரபரப்பான இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்களும் யூடியூப் சேனல்களும் உடனுக்குடன் செய்திகளை வழங்குவதில் போட்டிப்போட்டு செயல்பட்டுவருகின்றன. செய்தித்தாள் நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும்கூட இந்தக் களத்தில் இறங்கிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதிவேக ஊடகங்களான சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதே இதற்குக் காரணம்.

இதனைக் கருத்தில் கொண்டு www.youturn.in வலைத்தளம் செய்திகள், மீம்ஸ், வீடியோ, கட்டுரைகள், கேள்வி-பதில் என்பது போன்ற தலைப்புகளை உள்ளடக்கி தகவல்களை வழங்கிவருகிறது. உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அவ்வப்போது பதிவிடப்படுகின்றன. மேலும் பயனாளர்கள் கேள்வி கேட்டு பதில் பெறும் வகையில் நவீன கட்டமைப்புடன் செயல்படுகிறது இத்தளம். உடனுக்குடன் தகவல்களை அறிய இத்தளத்தைப் பார்க்கலாம்.

X