மாணவர்கள், ஆசிரியர்களுக்கான அறிவியல் திறன் போட்டி!

1/3/2019 3:44:58 PM

மாணவர்கள், ஆசிரியர்களுக்கான அறிவியல் திறன் போட்டி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பாகவும், பெங்களூருவில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம் சார்பாகவும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது. விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உங்களின் கீழ்க்கண்ட அறிவியல் தொடர்பான தனித்திறன்களை www.activityeducator.wordpress.com என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.

போட்டிகள் நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சேலம். அறிவியல் திருவிழா மேற்கண்ட இடங்களில் நடைபெறும். தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

தலைப்புகள்:  

1. அறிவியல் செயல்படும் மாதிரி அமைத்தல் (Science working model)

2. அறிவியல் கட்டுரை எழுதுதல் (Science article writing)

3. அறிவியல் கருத்துப்படம் கார்டூன் வரைதல் /ஓவியம் /அறிவியல் போஸ்டர் (Science theme picture-cartoon / Science Drawing / Science Poster Presentation) உள்ளிட்ட பல தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்தத் தலைப்புகளில் நீங்கள் நிபுணத்துவம் பெற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஊருக்கு அருகாமையில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிற்கு அழைக்கப்பட்டு, அங்கே உங்கள் படைப்பை பல கல்வியாளர்கள் முன்னிலையில் வெளிக்காட்டவும், செய்து காட்டவும் வாய்ப்பு வழங்கப்படும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், அவற்றிற்கு காப்பிரைட் உரிமம் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், அறிவியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அறிவியல் திருவிழாவை சிறப்பிக்க உள்ளார்கள்.உங்கள் யோசனைகளை அனுப்பி வைக்க மற்றும் தொடர்பு கொள்ள...

இ-மெயில்: activityeducator@gmail.com, indiaiscope@gmail.com
ஃபேஸ்புக்: www.facebook.com/groups/ISCOPE
கைப்பேசி எண்கள்: 7892898919 / 9481422237 (Whats App Number)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 5.1.2019
விண்ணப்பப் படிவம்: https://goo.gl/forms/xD7a3XkcHeDLvK6p1

இந்தப் போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் அறிவியல் ஆர்வலர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று, மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பங்கேற்பாளர்களை மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரைப்பார்கள். அதன் பின் தேசிய அளவிலான போட்டிக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

மாநில அளவிலான போட்டி

இந்தியாவிலேயே முதல் வான் அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூடம், ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் நடைபெறும். மாநில அளவில் தேர்வாகும் பங்கேற்பாளர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (பெங்களூரு) பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள். கல்வி மாவட்ட, மாவட்ட, மாநில அளவில் பங்கேற்கும் அனைவருக்கும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களூரு சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://activityeducator.wordpress.com/2018/12/17/science-innovation-festival-2019/ என்ற லிங்க் மற்றும் activityeducator.wordpress.com இணையதளத்தையும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-தி.ஜெனிபா

X