பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன்!

7/8/2019 5:13:55 PM

பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் சிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்சா-அப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களுடைய மகன் முகமது யாசின் அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். இவர் கடந்த ஆண்டு சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய்ப் பணத்தை எடுத்து பத்திரமாக எடுத்துச் சென்று தனது பள்ளியின் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.

இவரது செயலைக் கண்டு வியந்த ஆசிரியர்கள், அவரை அழைத்துக்கொண்டு ஈரோடு மாவட்ட காவல்துறை எஸ்.பி., சக்திகணேசனை சந்தித்து, சிறுவனின் கையாலேயே பணத்தை ஒப்படைத்தனர். இந்நிலையில், சிறுவன் முகமது யாசினைப் பற்றிய குறிப்புகள் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

X