மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக CTET தகுதித் தேர்வு!

9/11/2019 5:26:50 PM

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக CTET தகுதித் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்றத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இந்த மத்திய ஆசிரியர் தகுதித்  (Central Teacher Eligibility Test - CTET) தேர்வை நடத்தும் CBSE (Central Board of Secondary Education) அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எந்தப் பள்ளிகளின் பணிக்காக?

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், சென்ட்ரல் டையூ & டாமன், அந்தமான்-நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் NCT (National Capital Teritory) டெல்லி பள்ளிகள் இவற்றிற்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்ய CTET தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்

இந்தப் பள்ளிகளில் 1-5ம் வகுப்புகள் வரை ஆசிரியர்களாகப் பணி பெற
* +2-ல் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது. தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள்.

* குறைந்தது 45 விழுக்காடு பெற்று +2-ல் தேர்ச்சியும், இரண்டு வருட தொடக்கக் கல்விப் பட்டயம் (Elementary Education-Diploma)தேர்ச்சியும் பெற்றவர்கள்.

* குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது நான்காண்டு B.EL.Ed (Bachelor of Elementary Education) படிப்பின் இறுதி ஆண்டில் படிப்பவர்கள்.

* குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி (ஸ்பெஷல் எஜுகேஷன்) படிப்பவர்கள்.

* குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் பட்டயப்படிப்பும், இளநிலைக் கல்விப் படிப்பும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். என்.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் இளநிலைக் கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பணிக்கு சேர்ந்து ஆறு மாதத்திற்குள் தொடக்கக் கல்விக்கான பிரிட்ஜ் கோர்ஸ் முடிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் 6-8ம் வகுப்புகள் வரை ஆசிரியர்களாகப் பணி பெற

* பட்டப்படிப்பும் தொடர்ந்து இரண்டாண்டு தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு படித்துக்கொண்டுள்ளவர்கள்.

* குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பும், இளநிலைக் கல்வி ஓராண்டு முடித்தவர்கள்.

(அல்லது)

* குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்து பி.எட். எழுதவிருப்பவர்கள்.

(அல்லது)

* குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி அல்லது 4 ஆண்டுகள் B.EL.Ed. இறுதித் தேர்வு எழுதவிருப்பவர்கள்.

(அல்லது)

* குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் +2 முடித்தவர்கள் அல்லது 4 ஆண்டுகள் பி.ஏ./பி.எஸ்சி.,பி.எட். இறுதித் தேர்வு எழுதவிருப்பவர்கள்.

(அல்லது)

* குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் சிறப்புக் கல்வியியல் பிரிவில் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

(அல்லது)

* என்.சி.டி.இ. விதிமுறைப்படி பி.எட் முடித்தவர்கள்.

 குறிப்பு

அ) ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியில் 5 விழுக்காடு மதிப்பெண் சலுகை உண்டு.

ஆ) ஆசிரியர் கல்விப் பட்டயம், பட்டப்படிப்பு (என்.சிடி.இ. ஸ்பெஷல் எஜுகேஷன் பட்டயம் மற்றும் பி.எட். ரீஹெபிலிடேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா (RCI-Rehabilitation Council of India) அங்கீகாரம் இருப்பது மட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

இ) இவ்விதிகள் மொழி, சமூக அறிவியல், கணிதம், உளவியல் ஆசிரியர்களுக்கு பொருந்தும். விளையாட்டு ஆசிரியர்கள் என்.சி.டி.இ. அங்கீகாரம் உள்ள படிப்பை முடித்திருக்க வேண்டும். கலை (Arts), கைத்தொழில் (Crafts), ஹோம் சயின்ஸ் (Home Science), கைத்தொழில் (Work Education) இதுவரை வழக்கத்தில் உள்ள மாநில மற்றப் பள்ளிகள், என்.சி.டி.இ. அறிவிப்பு வரும்வரை பொருந்தும்.

CTET தேர்வு முறை

1 முதல் 5ம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தாள்  I, 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தாள்  II. இரண்டு பிரிவு பணி வாய்ப்புக்கும் விரும்புபவர்கள் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். 150 மதிப்பெண்கள் கொண்டது. தாள் I தேர்வு 2½ மணி அளவிலான சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலானது.

தேர்வுப் பாடத்திட்டம்

1) சைல்டு டெவலப்மென்ட் அண்டு பெடகாகி (கட்டாயம்) (Child Development and Pedagogy) (Compulsory) 30 வினாக்கள் - 30 மதிப்பெண்கள்

2) மொழி - I (கட்டாயம்) (Language-1) (Compulsory) 30 வினாக்கள் - 30 மதிப்பெண்கள்

3 மொழி - II (கட்டாயம்) (Language-II) (Compulsory) 30 வினாக்கள் - 30 மதிப்பெண்கள்

4) கணிதம் (Maths) 30 வினாக்கள் - 30 மதிப்பெண்கள்

5) சுற்றுப்புறக் கல்வி (Environmental Studies) 30 வினாக்கள் - 30 மதிப்பெண்கள்

இதேபோல 150 மதிப்பெண்கள் கொண்ட 2½ மணி நேரம், சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான தாள்  II தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் பார்ப்போம்.

1) சைல்டு டெவலப்மென்ட் அண்டு பெடகாகி (Child Development and Pedagogy) 30 வினாக்கள் - 30 மதிப்பெண்கள்

2) மொழி - I (Language-I) 30 வினாக்கள்-30 மதிப்பெண்கள்

3) மொழி-  (Language-II) 30 வினாக்கள் - 30 மதிப்பெண்கள்

4) கணிதம், அறிவியல், (கணித, அறிவியல் ஆசிரியர்கள்) 60 வினாக்கள் - 60 மதிப்பெண்கள்
(அல்லது)

5) சமுகப் படிப்புகள், சமூக அறிவியல் (Social Studies/Social Science Teacher) 60 வினாக்கள் - 60 மதிப்பெண்கள் என்ற பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்:

பொதுப் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர் தாள்-I அல்லது தாள் - IIக்கு ரூ.700, இரண்டு தாள்களுக்கும் ரூ.1200 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் தாள் - I அல்லது தாள் - IIக்கு ரூ.350, இரண்டு தாள்களுக்கும் ரூ.600 செலுத்த வேண்டும். ஈ-செலான், டெபிட், கிரெடிட் கார்டு வழியாக பணம் செலுத்தலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.9.2019. கட்டணம் செலுத்த கடைசி நாள் 23.9.2019.

தேர்வு நடைபெறும் தேதி:

தாள் - I 9.30 AM. முதல் 12.00 PM. வரை, தாள் - II 2 PM. முதல் 4.30 PM. வரை நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும்

X