11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு

2/11/2020 4:53:27 PM

11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ‘12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்குப் பொதுப் பிரிவு, தொழிற்கல்விப் பாடங்களுக்கு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வை நடத்தவேண்டும்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் 25-ம் தேதி வரையில் தேர்வினை நடத்தவேண்டும்.

ஏற்கனவே பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணவார்கள் 11ம் வகுப்பு படித்து தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 11ம் வகுப்பில் மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றவார்கள், வேறு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து தற்போது மற்றொரு பள்ளியில் 12ம் வகுப்பு மேற்கொண்டு வருபவர்கள் தற்போது 11ம் வகுப்பு ‘அரியார்’ தேர்வெழுதுவதாக இருந்தால் அவர்களுக்கு, பிப்ரவரி 25-க்குள் தனியாகச் செய்முறைத் தோ்வு நடத்தவேண்டும்.

இத்தேர்விற்கு உதவியாளர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளா், குடிநீா் வழங்குபவர் போன்ற ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். உயிரியல் பாடம், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்குத் தனியாக மதிப்பெண் குறிப்பிட வேண்டும். இயற்பியல் செய்முறை தேர்வில், அறிவியல் கால்குலேட்டா் மட்டும் அனுமதிக்கப்படலாம். இந்தத் தேர்வை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், எவ்விதப் புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும்’எனக் கூறப்பட்டுள்ளது.

X