TNPSC தேர்வை வேறு மாவட்டங்களில் எழுதக் காரணம் கூற வேண்டும்!

2/11/2020 4:55:27 PM

TNPSC தேர்வை வேறு மாவட்டங்களில் எழுதக் காரணம் கூற வேண்டும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழக அரசுத் துறைகளில் குரூப்-4 தொகுதியில் காலியாக உள்ள 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வைத் தமிழகம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் குரூப் -4 தேர்வில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை மையமாக தேர்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகத் தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளில் சில திருத்தங்களை டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டுள்ளது. அதன்படி தேர்வர்கள் சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் சென்று தேர்வு எழுத விரும்பினால் அதற்குரிய விவரங்களை விண்ணப்பிக்கும்போது கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை தற்போது தொடங்கியுள்ள குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
      

X