பொறியியல் பட்டம் படிக்க வேதியியல் தேவையில்லை

3/4/2020 3:53:25 PM

பொறியியல் பட்டம் படிக்க வேதியியல் தேவையில்லை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All India Council for Technical Education - AICTE) நடப்புக் கல்வியாண்டிற்கு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்பில் சேர்வதற்கு வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக எஞ்சினியரிங் படிப்பில் சேர வேண்டுமென்றால், +2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இந்தச் சூழலில் AICTE கல்விக்குழு தற்போது பொறியியல் படிப்பிற்கான விதிமுறைகளைத் திருத்திவருகிறது. அதன்படி, எஞ்சினியரிங் படிப்பிற்கு +2-வில் வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. அதாவது, கட்டாயப் படிப்பிலிருந்து வேதியியல் பாடம் நீக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறை நடப்பு 2020-21 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய விதிமுறைகள் பற்றிய சுற்றறிக்கை அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பப்பட உள்ளது. முன்னதாகப் பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை திருத்துவதற்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் எஞ்சினியிரிங் கல்விக் கட்டணம் 1.50 லட்சம் ரூபாய் வரையில் உயரும் அபாயம் உள்ளது. மேலும், எஞ்சினியரிங் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்குமாறும் ஏ.ஐ.சி.டி.இ வலியுறுத்தியுள்ளது.

X