உயிரித் தகவலியலில் முதுகலைப் பட்டம் படிக்க விருப்பமா?

5/5/2017 5:22:49 PM

உயிரித் தகவலியலில் முதுகலைப் பட்டம் படிக்க விருப்பமா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

B.E., B.Tech., MBBS பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கர்நாடக மாநிலம்  பெங்களூருவில் உயிரித் தகவலியல் மற்றும் பயன்பாட்டு உயிரித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Institute of Bio informatics and Applied Bio technology) உள்ளது. இந்நிறுவனத்தில் உள்ள இரண்டு வருடகால அளவிலான எம்.எஸ்சி (M.Sc - Bioinformatics & Applied Biotechnology) பட்டப்படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: இப்படிப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கப் பொறியியல், மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த இளநிலைப் பட்டப்படிப்புகளில்  (B.Tech, B.E, MBBS, BDS, B.Pharm, BAMS, B.Sc,) தொடர்புடைய பாடங்களில் (Computer Science, Chemistry, Pharma, Physics, Mathematics, Statistics, Bio Technology, Zoology, Botany, Biochemistry, Microbiology, Agriculture, Medicine, Dentistry, Veterinary Sciences) தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மேற்கண்ட படிப்புகளில் ஜூன் அல்லது ஜூலை 2017க்கு முன்பாகத் தேர்வு முடிவுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புடையவர்களும் விண்ணப்பிக்க முடியும். இப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: இதில் சேர விரும்புவோர் http://www.ibab.ac.in/index.php/admission-procedure என்ற இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது இணையத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக இந்திய மாணவர்கள் ரூ.500, என்.ஆர்.ஐ. மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ரூ.1000 என இணையப் பணப்பரிமாற்ற முறையில் (NEFT) இந்நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.

இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நிரப்பி அதனுடன் விண்ணப்பக் கட்டணத்தை “Institute of Bioinformatics and Applied Bio technology” எனும் பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து அனுப்பி வைக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.5.2017.

நுழைவுத்தேர்வு: விண்ணப்பித்த அனைவருக்கும் இணைய வழியில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வினைச் சிறந்த கணினி மற்றும் இணையம் வசதியுடைய இடங்களிலிருந்தும், வீட்டிலிருந்தும் கூட எழுத முடியும். இந்த நுழைவுத்தேர்வுகள் 17.4.2017 முதல் 19.4.2016, 1.5.2017 முதல் 3.5.2017, 15.5.2017 முதல் 17.5.2017 மற்றும் 1.6.2017 முதல் 3.6.2017 என்று மூன்று நாட்களாக நான்கு கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்நாட்களில் ஒரு நாளைத் தேர்வு செய்து நுழைவுத்தேர்வினை எழுத முடியும்.

கூடுதல் விவரங்களை அறிய, மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது “Admissions Office, Institute of Bio informatics and Applied Biotechnology, Biotech Park, Electronics City, Phase I, Bengaluru  560100, Karnataka” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது 080  28528900 / 01 / 02 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது 09611872946 எனும் அலைபேசியிலோ அலுவலக வேலைநாட்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி

மேலும்