ஆசிரியர் பயிற்சிக்கான பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாரா?

5/11/2017 10:53:08 AM

ஆசிரியர் பயிற்சிக்கான பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாரா?

1961 ஆம் ஆண்டு இந்திய அரசினால் தொடங்கப்பட்ட NCERT (நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்டு டிரெயினிங்) என்ற அமைப்பு,  மத்திய மற்றும் மாநில அளவில் பள்ளிக் கல்வித்தரத்தை உயர்த்தும் கொள்கை கொண்டது. ஆசிரியப் பணியை தேர்ந்தெடுப்பவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, ஆசிரியர்களுக்குக் கல்வியில் நவீன யுக்திகளையும் கற்றுத் தருகிறது.

கர்நாடகாவின் மைசூருவில் ரீஜினல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட தென்னிந்தியாவிற்கான  நிறுவனம். இங்கு அளிக்கப்படும் ஆசிரியப் பயிற்சித் திட்டங்கள் யூனிவர்சிட்டி ஆஃப் மைசூரு பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்சிக்கான கட்டாய மாணவர் சேர்க்கை தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி, லட்சத்தீவுகளில் உள்ளவர்களுக்காகவே.

காலியிடங்கள்:
இதில் உள்ள B.Sc.B.Ed பட்டப்படிப்பிற்காக 80 காலியிடங்களும், இயற்பியல் வேதியியல் பிரிவுகளுக்கு 40 காலியிடங்களும், (பயாலஜி) உயிரியல் பிரிவிற்கு 40 காலியிடங்களும் உள்ளன.

தகுதி:
பிளஸ்டூ முடித்த(2015-2016) மாணவர்கள்  முடித்தவர்களும், 2017 இல் தேர்வு எழுதியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம் (அ) இயற்பியல், வேதியியல், உயிரியல் (அ) வேதியியல், உயிரியல், உயிர்வேதியியல் படித்திருப்பது தேவை.  

கணிதத்திற்கு மாற்றாகப் புள்ளியியல் படித்திருக்கலாம். பிளஸ்டூவில் 50% எடுத்துத் தேர்ச்சி தேவை. SC/ST/PH பிரிவினர் 45% எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி SC 15%, ST 75%, OBC 27%, PH 3% பிரிவினருக்கு முன்னுரிமை உண்டு. மைசூருவில் தங்கிப் படிக்க ஹாஸ்டல் வசதி உண்டு. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவினர் மற்றும் OBC-க்கு விண்ணப்பத் தொகை ரூ. 800, SC/ST/PH பிரிவினருக்கு ரூ. 400. <www.ncert-cee.kar.nic.in> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வுகள்
குரூப் A - B.Sc.B.Ed./B.A.B.Ed./M.Sc.Ed. (மைசூரு), குரூப் B - B.Ed., B.Ed-M.Ed. (ஒருங்கிணைந்தது),குரூப் C - M.Ed. பிரிவுகளில் நடத்தப்படும். குரூப்-A பிரிவினருக்கு பிளஸ்டூவில் அவர்கள் படித்த பாடங்களிலிருந்தும், குரூப்-B பிரிவினருக்கு அவர்கள் பயின்ற பட்டப்படிப்புப் பிரிவிலிருந்தும், குரூப்-C பிரிவினருக்கு அவர்கள் பயின்ற B.Ed. பகுதிகளிலிருந்தும் வினாக்கள் அமையும்.

எல்லாப் பிரிவினருக்கும் 1. ஆங்கிலப் புலமை (Language proficiency), 2. கல்வி கற்பித்தல் நுணுக்கங்கள் (Teaching aptitude),3. ரீசனிங் எபிலிட்டி (Reasoning ability) இவை குறித்த வினாக்கள் உண்டு. ஆங்கிலத்திலிருந்து - 20, கற்பித்தல் - 30, ரீசனிங் - 30 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகள் உண்டு. 2 மணி நேரத்தேர்வில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே வினாக்கள் கேட்கப்படும். சரியான விடைகளுக்கு 2 மதிப்பெண்களும், தவறான விடைகளுக்கு -0.5 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

விண்ணப்பம் வந்து சேரக் கடைசி தேதி:  ஜூலை 2017.

மேலும்