வெளிநாட்டுத் தொழில் நிறுவனத்தில் எம்.பி.ஏ சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு ரெடியா?

9/11/2017 11:54:04 AM

வெளிநாட்டுத் தொழில் நிறுவனத்தில் எம்.பி.ஏ சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு ரெடியா?

புதுடெல்லியிலுள்ள இந்திய அரசின் தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Indian Institute of Foreign Trade இல் எம்.பி.ஏ பன்னாட்டு வணிகம் (MBA (International Business)) படிப்பில் 2018-2020 ஆண்டுச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

* கல்வித்தகுதி
இளநிலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண் தேர்ச்சி தேவை. எஸ்சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

* இளநிலைப் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டில் படிப்பவர்களும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நிலையில் 8-10-2018 அன்று தங்களுடைய இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்படிப்புச் சேர்க்கைக்கு வயது வரம்பில்லை.

* சேர்க்கை முறை
எழுத்துத்தேர்வு (Written Test), குழுக்கலந்துரையாடல்(Group Discussion) நேர்காணல் (Interview) மற்றும் கட்டுரை எழுதுதல் (Essay Writing) போன்றவைகளின் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* விண்ணப்பம்
https://iiftadmissions.net.in/instruction.aspx எனும் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,550/-, எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ.775/- விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பக் கட்டணமாக அமெரிக்க டாலராக US$80 செலுத்த வேண்டியிருக்கும். டிடி எடுத்து இணையம் வழி விண்ணப்பம் செய்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் “Indian Institute of Foreign Trade” எனும் பெயரில், டெல்லியில் மாற்றும்படி உரிய விண்ணப்பக் கட்டணத்துக்கான டிடி பெற்று அனுப்பலாம்.  

* விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15-9-2017, ரூ.1000/- அபராதக் கட்டணத்துடன் தேர்வு மையம் மாற்றிக்கொள்ளக் கடைசி நாள்: 3-11-2017. வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் போன்றவர்கள் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15-2-2018.

* நுழைவுத் தேர்வு
இந்தியாவில் 20 மையங்களில் இதற்கான எழுத்துத் தேர்வு 3-12-2017 அன்று நடத்தப்பெறும். நுழைவுத்தேர்வுக்கான அனுமதி அட்டையினை 15-11-2017 முதல் இணையதளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.   

* மாணவர் சேர்க்கை
எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் குழுக்கலந்துரையாடல், நேர்காணல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்றவை நடத்தப்பட்டு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.

* பயிற்சிக் கட்டணம்
2017-2019 ஆம் ஆண்டுக்கான பிரிவில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்குப் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ. 15,70,000/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.7,85,000/- வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு அமெரிக்க டாலர் US$ 60,000 பயிற்சிக் கட்டணம். மேலும், பயிற்சிக்கட்டணம் தவிர்த்து, ரூ.55,000/- இதர கட்டணங்கள் எனும் பிரிவில் செலுத்தியுள்ளனர். இவை, தவிர, தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணம் தனி. 2018-2020 ஆம் ஆண்டுகளுக்கான படிப்பில் சேர்க்கை பெறுபவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் / ஏப்ரல் மாதத்தில் முழுக்கட்டண விவரங்களும் தெரிவிக்கப்படும்.     

* கூடுதல் தகவல்கள்
admissions@iift.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ, 011-39147213 எனும் நேரடித் தொலைபேசி எண்ணிலோ அல்லது 011 - 39147200 - 05 (Ext. 621) என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தேனி மு. சுப்பிரமணி

மேலும்