ஐஏஎஸ்/ஐபிஎஸ் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி

9/12/2017 5:44:10 PM

ஐஏஎஸ்/ஐபிஎஸ் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய உயரதிகாரி பதவிகளுக்கான தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரி பயிற்சிக்கு அரசு விடுதியில் தங்கியிருந்து படிப்பவர்களுக்கு 225 இடங்களும், தினமும் பயிற்சி நிலையத்திற்கு வந்து சென்று பகுதிநேரமாக படிப்பவர்களுக்கு 100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி:

UPSC Civil Services Prelimininary Examination Coaching- 2018.

வயது வரம்பு:

1.8.2018 அன்று 21 முதல் 32க்குள். பிற்பட்டோர்/முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோர் ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம்.

கல்விக் கட்டணம்:

முழுநேரம் தங்கியிருந்து படிப்பவர்களுக்கு ரூ.1000/-. பகுதிநேரம் படிப்பவர்களுக்கு ரூ.3,000.

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
சென்னை, கடலூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

தகுதியானவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2017.

மேலும்