பிஇ, பிடெக் படித்தவர்களுக்கு கேட் 2018 தேர்வு அறிவிப்பு

9/20/2017 2:50:02 PM

 பிஇ, பிடெக் படித்தவர்களுக்கு கேட் 2018 தேர்வு அறிவிப்பு

பி.இ., பி.டெக்., படித்தவர்களுக்கு Graduate Aptitude Test in Engineering (GATE)-2018 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட்-2018 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

தேர்வு:

GATE- 2018.

கல்வித்தகுதி:  

பிளஸ் 2 தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக் அல்லது இன்ஜினியரிங்/டெக்னாலஜி  பாடப்பிரிவில் பி.எஸ்சி/டிப்ளமோ அல்லது ஆர்க்கிடெக்சர் பாடத்தில் இளநிலை  பட்டம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.10.2017.

விண்ணப்ப  கட்டணம்:

பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.1,500. பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி மற்றும் விவரங்களை www.gate.iitg.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும்

X