கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு!

5/7/2018 11:52:50 AM

கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

IMU CET - 2018

முனைவர் ஆர்.ராஜராஜன்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Mari Time University - IMU) மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சகத்தின்கீழ், சென்னையைத் தலைமையகமாகக்கொண்டு இயங்குகிறது. இப்பல்கலைக்கழகம் கடல்சார் படிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்குக் கடல்சார் அறிவியல், சுற்றுச்சூழல் படிப்புகள், கடல்சார் வரலாறு, கடல் சார்பான சட்டங்கள், கடல் பாதுகாப்பு, கடலில் காணாமல்போன கப்பல்களையும், மனிதர்களையும் தேடிக் கண்டுபிடித்தல், வணிகப் பொருட்களைக் கப்பல்களில் எடுத்துச் செல்லுதல், அப்படி எடுத்துச்செல்லும்போது ஏற்படும் விபத்துகள் போன்றவை தொடர்பான துறைகளில் ஆய்வுகள் செய்தல் போன்றவற்றைக் கற்பிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

கடல்சார் பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்கள்

1. சாணக்கியா டிரெயினிங் ஷிப் (Chanakya Training Ship) - மும்பை
2. லால்பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆஃப் அட்லான்ஸ் ஸ்டடிஸ் அண்ட் ரிசர்ச் - மும்பை
3. மெரைன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - மும்பை
4. மெரைன் எஞ்சினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கொல்கத்தா
5. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் போர்டு மேனேஜ்மென்ட் - கொல்கத்தா
6. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஷிப் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டர் - விசாகப்பட்டினம்
7. நேஷனல் மேரி டைம் அகாடமி - சென்னைஇவை தவிர பல்கலைக்கழகத்தால் அங்ீகரிக்கப்பட்ட கல்லூரிகள் 22 உள்ளன.

IMU வழங்கும் படிப்புகள்இளநிலைப் பட்டப்படிப்புகள்

1. B.Tech. Marine Engineering -
4 ஆண்டுகள்
2. Naval Architecture and Ocean Engineering - 4 ஆண்டுகள்
3. BBA - logistics, Retailing, E-Commerce - 3 ஆண்டுகள்
4. B.Sc., Mari Time Sciences - 3 ஆண்டுகள்
5. B.Sc., Nautical Sciences - 3 ஆண்டுகள்
6. B.Sc., Ship Building and Repair -
3 ஆண்டுகள்
7. Diploma in Nautical Science - B.Sc., (Applied Nautical Science) - 4 ஆண்டுகள்முதுநிலைப் பட்டப் படிப்புகள்

1.M.Tech. Marine Engineering and Management - 2 ஆண்டுகள்
2. M.Tech. Naval Architecture and Ocean Engineering - 2 ஆண்டுகள்
3. M.Tech. Dredging and Harbour Engineering - 2 ஆண்டுகள்
4. M.Sc. Commercial Shipping and Logistics - 2 ஆண்டுகள்
5. M.B.A. Port and Ship Management - 2 ஆண்டுகள்
6. M.B.A. International Transportation and logistical Management- 2 ஆண்டுகள்

முதுநிலைப் பட்டயப்படிப்புகள்

முதுநிலைப் பட்டயப்படிப்பில் Post Graduation Diploma in Marine Engineering (PGDME) - 1 ஆண்டு படிப்பை வழங்குகிறது. இவை தவிர IMU ஆண்டிற்கு இருமுறை, பிஎச்.டி., எம்.எஸ். போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.

இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதிசென்னை, கொச்சினில் உள்ள ஸ்கூல் ஆஃப் மேரி டைம் மேனேஜ்மென்ட்டில் உள்ள பி.பி.ஏ. (லாஜிஸ்டிக்ஸ், ரீடெயிலிங் அண்ட் இ.காமர்ஸ்) படிப்பிற்கு +2ல் ஏதேனும் ஒரு பிரிவில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தது 60 விழுக்காடும், பத்தாம் வகுப்பு அல்லது +2-ல் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும். இம்மதிப்பெண்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 விழுக்காடு சலுகை உண்டு.

ஸ்கூல் ஆஃப் நாட்டிக்கல் ஸ்டடீஸ், மும்பை, சென்னையில் டி.என்.எஸ் (DNS) மற்றும் இதைத் தொடர்ந்த பி.எஸ்சி., (அப்ளைடு சயின்ஸ்) படிக்க, இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் பி.எஸ்சி., இயற்பியலுடன் எலக்ட்ரானிக்ஸ் பி.எஸ்சி-யில் குறைந்தது 60 விழுக்காடு, ஐ.ஐ.டி. அல்லது ஏதேனும் ஒரு எ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் உள்ள கல்லூரியில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடனும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் 5 விழுக்காடு சலுகை உண்டு.சென்னை, மும்பை, கொச்சினில் உள்ள பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்சில் சேர +2-ல் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் குறைந்தது 60 விழுக்காடும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் 5 விழுக்காடு சலுகை உண்டு. மும்பையில் உள்ள பி.எஸ்சி., மேரி டைம் சயின்ஸ் படிக்கவும் இதே தகுதிகள் பொருந்தும்.

கொல்கத்தா, மும்பையில் உள்ள ஸ்கூல் ஆஃப் மெரைன் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பி.டெக். (மெரைன் எஞ்சினியரிங்) சேர, +2-ல் இயற்பியல், கணிதம், வேதியியலில் குறைந்தது 60 விழுக்காடும், பத்தாம் வகுப்பு அல்லது +2-ல் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 விழுக்காடு சலுகை உண்டு.

ஸ்கூல் ஆஃப் நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் ஓசியன் எஞ்சினியரிங் விசாகப்பட்டினத்தில் பி.டெக். சேரவும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. (ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர்) சேரவும், +2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் இவற்றில் முறையே 60 விழுக்காடும், பத்தாம் வகுப்பு அல்லது +2-ல் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 விழுக்காடு சலுகை ஆங்கிலம் அல்லாத பாடங்களுக்கு உண்டு.
வயதுவரம்பு: இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 18 முதல் 26 வயது இருக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வயதில் சலுகை உண்டு.

இளநிலைப் படிப்பிற்கு மாணவர்கள் 2.6.2018 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் ஆன்லைன் அகில இந்திய நுழைவுத் தேர்வு வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.பி.பி.ஏ. (லாஜிஸ்ட்டிக்ஸ், ரிடெயிலிங், இ.காமர்ஸ்) தவிர மற்ற இளநிலைப் படிப்பு களுக்கு ஆங்கிலம், பொது நுண்ணறிவு, இயற்பியல், வேதியியல், கணிதம் என்ற பாடங்களில் 200 சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் கேட்கப்படும். தேர்வு ஆன்லைனில் நடைபெறும்.

முதுநிலைப் படிப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் அல்லது நேவல் ஆர்க்கிடெக்சர் அல்லது மெரைன் எஞ்சினியரிங் அல்லது சிவில் எஞ்சினியரிங்கில் 120 சரியான விடையைத் தேர்வு செய்யும் வினாக்கள் ஆன்லைனில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

பி.பி.ஏ. படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.200, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.140 ஆகும். மற்ற படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, ஆதிதிராவிடர், பழங்குடியினர்க்கு ரூ.700.

BBA தவிர்த்த மற்ற இளநிலைப் படிப்புகளுக்கு முக்கிய நாட்கள்
ஆன்லைன் பதிவு இறுதி நாள் :   11.05.2018
நுழைவுச்சீட்டுப் பதிவிறக்கம்    :    16.05.2018
கணினித் தேர்வு    :    02.06.2018
கல்லூரி தொடக்கம்    :    01.08.2018
BBA படிப்புகளுக்கு முக்கிய நாட்கள்
ஆன்லைன் பதிவு இறுதி நாள்    :    20.06.2018
கல்லூரி தொடக்கம்    :    01.08.2018
மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.imu.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும்

X