MBBS,BDS இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு!

12/5/2018 2:54:37 PM

MBBS,BDS இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமம் சிமிழ் - கல்வி வழிகாட்டி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை (பொது மருத்துவம் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய National Eligibility Cum Entrance Test (NEET- UG) தேர்வு கட்டாயமாக்கப்பட்டு தமிழகத்தில் பல எதிர்ப்புகளையும் கடந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency - NTA) நடத்துகிறது.

நீட் தேர்வு, அனைத்திந்திய இடங்கள், மாநில அரசின் இடங்கள், மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் பொது மருத்துவ இடங்கள், பல் மருத்துவப் பல்கலைக்கழகங்களின், கல்லூரிகளின் மேனேஜ்மென்ட், என்.ஆர்.ஐ.(NRI) இடங்கள், மத்திய அரசின் இடங்கள், A.F.M.C. (Armed force Medical College) ஈ.எஸ்.ஐ. டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?

கல்வித்தகுதி: இந்திய அரசு அல்லது அந்தந்த மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அதற்கு இணையான பன்னிரண்டாம் வகுப்பில் செய்முறையுடன் கூடிய இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது) உயிர்தொழில்நுட்பம் இத்துடன் கணிதம் அல்லது ஏதேனும் ஒரு பாடம்,
இத்துடன் ஆங்கிலம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்.ஐ.ஓ.எஸ். (N.I.O.S-National Institute of Open Schools) அல்லது மாநிலத் திறந்தவெளி பள்ளிகள் இவற்றில் படித்து தேர்ச்சி பெற்றவர்களும், உயிரியல்/உயிர்தொழில்நுட்பம் என்ற பாடங்களில் ஒன்றை இணை பாடமாக (அடிஷனல்) எடுத்தவர்களும் உச்சநீதிமன்றத்தின் முடிவிற்கு உட்பட்டு விண்ணப்பிக்க இயலும்.

பன்னிரண்டாம் வகுப்பில், பொதுப்பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர்தொழில்நுட்பம் இவற்றில் தனித்தனியாக 50 விழுக்காடும், மொத்தத்தில் 50 விழுக்காடும் எடுத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இப்பாடங்களின் மொத்த மதிப்பெண்ணில் 40 விழுக்காடும், மாற்றுத்திறனாளிகள் 45 விழுக்காடும் எடுத்திருக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பவர், இயற்பியல், வேதியியல், உயிரியல், அல்லது உயிர்தொழில்நுட்பம், ஆங்கிலம் இவற்றின் மொத்த மதிப்பெண்ணில் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.12.2018 நிலவரப்படி விண்ணப்பிக்க 17 வயது முடித்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 25. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் தளர்த்தப்படும். பொதுப் பிரிவினர் 5.5.1994 - 31.12.2002-க்குள் பிறந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் 5.5.1989  31.12.2002-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

இந்தியக் குடிமக்களோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியரோ, எம்.பி.பி.எஸ். படிப்புகளை வெளிநாடுகளில் உள்ள பொது மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க NEET(UG) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

நீட் நுழைவுத் தேர்வு எழுத தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ntaneet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2018. விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் ரூ.1400ம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.750ம் டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலமோ அல்லது நெட் பேங்கிங் மூலமோ செலுத்த வேண்டும்.

மேலும் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்து, இடது கை பெருவிரல் ரேகை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இந்தியர்கள், அயல்நாடு வாழ் இந்தியர்கள், ஓவர்சீஸ் இந்தியாவில், இந்திய வம்சாவளியினர், அந்தந்த மாநிலங்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் விதிகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

அனைத்திந்திய அளவில் 15 விழுக்காடு இடங்களுக்கு என்.ஆர்.ஐ., ஓ.சி.ஐ.(OCI), பி.ஐ.ஓ. (P.I.O) அயல்நாட்டினர் (ஜம்மு&காஷ்மீர்) தவிர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அனைத்து மாநில மாணவர்களும் ஆதார் அட்டை (கடைசி 4 இலக்கம்), எலக்‌ஷன் கார்டு, ரேஷன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் நம்பர், பாஸ்போர்ட் நம்பர் என்று ஏதேனும் ஒன்றை அடையாளமாக பயன்படுத்தலாம்.

என்.ஆர்.ஐ.மாணவர்கள், பாஸ்போர்ட், ஆதார்கார்டு என்ற ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். அயல் நாட்டினர் ஓவர்சீஸ் இண்டியன்கள், பி.ஐ.ஓ. (PIO) பிரிவினர் பாஸ்போர்ட் எண்ணை பயன்படுத்தலாம்.

நுழைவுத் தேர்வு

நீட் நுழைவுத் தேர்வு 5.5.2019 ஞாயிறு அன்று 2PM to 5PM (மூன்று மணி நேரம்) நடைபெறும். மொத்தம் 154 மையங்களில் நடைபெறும். இத்தேர்வு வினாத்தாளில் இயற்பியல் 45, வேதியியல் 45, உயிரியல்(தாவரவியல் & விலங்கியல்) 90 என்ற விதத்தில் மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் என்று மொத்த மதிப்பெண்கள் 720 வழங்கப்படும்.

ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் குறையும். அனைத்து மையங்களிலும் ஆங்கில மற்றும் ஹிந்தியிலும், அசாமில் ஆங்கிலம், அசாமிஸிலும், மேற்கு வங்கம், திரிபுராவில் ஆங்கிலம் மற்றும் பெங்காலியிலும், குஜராத், டாமன், டையு, டாட்ரா, நாஹர் ஹவேலியிலும், கர்னாடகாவில் ஆங்கிலம் மற்றும் கர்நாடகத்திலும், மஹாராஷ்டிராவில் ஆங்கிலம் மற்றும் மராத்தியிலும், ஒடிசாவில் ஆங்கிலம் மற்றும் ஒடியாவிலும், தமிழ்நாட்டில் ஆங்கிலம் மற்றும் தமிழிலும், ஆந்திரபிரதேசம், தெலுங்கானாவில் ஆங்கிலம் மற்றும் தெலுங்கிலும் இது தவிர, அனைத்து மையங்களிலும் ஆங்கிலம் மற்றும் உருதிலும் வினாத்தாள் இருக்கும்.

நீட் தேர்வுக்கான பாடத்திட்டம்

Physics Class 11th Topics

* Physical world and measurement
* Kinematics
* Laws of motion
* Work, energy and power
* Motion of system and particles of rigid body
* Gravitation
* Properties of bulk matter
* Thermodynamics
* Behaviour of perfect gas and kinetic theory
* Oscillations and waves

Physics Class 12 thTopics

* Electrostatics
* Current electricity
* Magnetic effects of current and magnetism
* Electromagnetic induction and alternating currents
* Electromagnetic waves
* Optics
* Dual nature of matter and radiation
* Atoms and nuclei
* Electronic devices

Chemistry Class 11th Topics

* Some basic concepts of Chemistry
* Structure of atoms
* Classification of elements and periodicity in properties
* Chemical bonding and molecular structure
* States of matter: gases and liquids
* Thermodynamics
* Equilibrium
* Redox reactions
* Hydrogen
* s-block elements (Alkali and Alkaline earth metals)
* Some p-block elements
* Hydrocarbons
* Environmental chemistry
* Organic chemistry - some basic principles and techniques

Chemistry Class 12th Topics

* Solid state
* Solutions
* Electrochemistry
* Chemical kinetics
* Surface chemistry
* General principles and process of isolation of elements
* p-block elements
* d and f block elements
* Coordination compounds
* Haloalkanes and Haloarenes
* Alcohols, Phenols and Ethers
* Aldehydes, Ketones and Carboxylic acids
*Organic compounds containing nitrogen
* Biomolecules
* Polymers
* Chemistry in everyday life

Biology Class 11th Topics

* Diversity in living world
* Structural organization in animals and plants
* Cell structure and function
* Plant physiology
* Human physiology

Biology Class 12 thTopics

* Reproduction
* Genetics and evolution
* Biology and human welfare
* Biotechnology and its applications
* Ecology and environment

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் திட்டமிட்டு படித்து தேர்வை பதற்றமின்றி எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!

X