முப்படைகளில் பணிவாய்ப்பு பெற என்டிஏ தேர்வுக்கு ரெடியா?

1/2/2019 4:55:31 PM

முப்படைகளில் பணிவாய்ப்பு பெற என்டிஏ தேர்வுக்கு ரெடியா?

பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரிகள் நிலையில் பணிபுரிய தகுதியுடைய இளைஞர்களை தேர்வு செய்ய நேஷனல் டிபன்ஸ் அகடமி நுழைவுத் தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடத்துகிறது. ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் தேர்வுகளில் 2019ம் ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட உள்ளது. தரைப்படைக்கான நேஷனல் டிபன்ஸ் அகடமி டேராடூனிலும், கடற்படையின் இந்திய நேவல் அகடமி எழில்மலாவிலும், விமானப்படைக்கான அகடமி குண்டக்கல்லிலும் உள்ளது. தரைப்படைக்கு 208, கடற்படைக்கு 39, விமானப்படைக்கு 92 என மொத்தம் 339 இடங்கள் உள்ளன. இவை தவிர நேவல் அகடமியின் 10 +2 கேடட் என்ட்ரி திட்டத்தில் 44 இடங்கள் இருக்கும்.தரைப்படைக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விமானப்படைக்கும், கடற்படைக்கும் விண்ணப்பிக்க இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை எடுத்து +2வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரும் ஆண்டு தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.600 பணமாக ஏதேனும் ஒரு ஸ்டேட் பாங்க் கிளை அல்லது நெட் பாங்க் வழியாக செலுத்தலாம். ஆதி திராவிடர், பழங்குடியினர், ஜேசியூ, என்சிஓ பிள்ளைகளுக்கு கட்டணம் கிடையாது. தேர்வு மையங்கள், முக்கிய நாட்கள், நுழைவுத்தேர்வு எப்படியிருக்கும்? எந்த முகவரியில் தொடர்பு கொள்வது போன்ற விபரங்களுக்கு டிச.16 - 31 தேதிய குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி இதழை பார்க்கவும்.

மேலும்

X