முப்படைகளில் பணி வாய்ப்பு பெற NDA தேர்வுக்கு தயாராகுங்க!

1/3/2019 3:06:38 PM

முப்படைகளில் பணி வாய்ப்பு பெற NDA தேர்வுக்கு தயாராகுங்க!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உலக அரங்கில், பெருமைமிகு இடத்தைப் பெற்றுள்ள பாரதத்தின் முப்படைகளில் ஒன்றில் இணைந்து அதிகாரிகளாக பணிபுரிய இளைஞர்களுக்கு என்றுமே தணியாத ஆர்வமுண்டு. இந்நிலையில் இந்தியாவின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவை ஆர்வமும், துடிப்பும், நாட்டுப்பற்றும், தியாக உணர்வும் உள்ள கல்வி வளமும், உடல்நலமும் உள்ள நம் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை அள்ளித் தருகிறது.

- முனைவர் ஆர்.ராஜராஜன்

பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரிகள் நிலையில் பணிபுரிய தகுதியுடைய இளைஞர்களைத் தேர்வு செய்ய, ‘நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி’ நுழைவுத் தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) மூலம் நடத்துகிறது. ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் தேர்வுகளில் 2019ஆம் ஆண்டிற்கான முதல் தேர்விற்கான அறிவிப்பை U.P.S.C. வெளியிட உள்ளது.

தரைப்படைக்கான நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி டேராடூனிலும், கடற்படையின் இந்திய நேவல் அகாடமி எழில்மலாவிலும், விமானப்படைக்கான விமானப்படை அகாடமி குண்டக்கல்லிலும் (ஐதராபாத்) உள்ளன. தரைப்படைக்கு 208, கடற்படைக்கு 39, விமானப்படைக்கு 92 என்று மொத்தம் 337 இடங்கள் NDA-ல் இருக்கும். இவை தவிர, நேவல் அகாடமியின் 10+2 கேடட் என்ட்ரி ஸ்கீமில் 44 இடங்கள் இருக்கலாம். ஆகவே, NAD-ல் 339+44=383 இடங்கள் இருக்கலாம்.

விண்ணப்பிக்கத் தகுதி :

இந்திய குடிமக்கள், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் குடிமக்கள், 1.1.1962க்கு முன் இந்தியாவில் குடியேறிய திபெத் அகதிகள், பாகிஸ்தான், பர்மா, இலங்கை, கென்யா, உகாண்டா, டான்சானியா, ஜாம்பியா, மானலி, ஸேயர், எத்தியோப்பியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்த இந்திய பூர்வகுடிமக்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு 1.7.2000 முதல் 1.7.2003 வரை பிறந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தரைப்படைக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப்படைக்கும், கடற்படைக்கும் விண்ணப்பிக்க, இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை எடுத்து +2 முதல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரும் ஆண்டு +2 அரசு பொதுத் தேர்வை எழுத விருப்போரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upslonline.nic.in என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணத்தை ரூ.600 பணமாக ஏதேனும் ஒரு ஸ்டேட் பேங்க் கிளையிலோ அல்லது நெட் பேங்க் வாயிலாகவோ, விசா, மாஸ்டர், கிரெடிட்/டெபிட் கார்டு வாயிலாகவோ செலுத்தலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், J.C.U. (Junior Commission Officers). N.C.O (Non Commission Officer) இவர்களின் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு மையங்கள் :

அகர்த்தலா, அகமதாபாத், அய்ன்ஸ்லால், அலகாபாத், பெங்களூரு, பெய்ரேலி, போபால், சண்டிகர், சென்னை, கட்டாக், டேராடூன், டெல்லி, தார்வாதி, டிஸ்யூர், காஸ்டாக், ஐதராபாத், இம்பால், இட்டா நகர், ஜெய்ப்பூர், ஜம்மு, ஜோர்ஹாம், கொச்சி, கொஹிமா, கொல்கத்தா, லக்னோ, மதுரை, மும்பை, நாக்பூர், பனாஜி, (கோவா) பாட்னா, போர்ட் பிளேர், ரெய்ப்பூர், ராஞ்சி, சம்பல்பூர், ஷில்லாங், சிம்மா, நகர், திருவனந்தபுரம், திருப்பதி, உதய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ளன.

முக்கிய நாட்கள்
 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 4.2.2019
தேர்வு நாள்: 21.4.2019
நுழைவுத் தேர்வு எப்படியிருக்கும்?

இத்தேர்வு எழுத்துத் தேர்வு, SSB (Service Selection Board) நுழைவுத் தேர்வு என்ற இரண்டு பிரிவுகளாக நடைபெறும். எழுத்துத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கான 2½ மணி நேரக் கணிதத் தேர்வும், 600 மதிப்பெண்களுக்கான 2½ மணி நேர ஜெனரல் எபிலிட்டி (General Ability) தேர்வும் உண்டு. மொத்த எழுத்துத் தேர்விற்கான மதிப்பெண்கள் 900. கணிதத்தில் அல்ஜிப்ரா (Algebra), மேட்ரிக்ஸ், டிட்டர்மினென்ட்ஸ் (Matrics, Determinonts) டிரிக்னாமெட்ரி (Trigonometry), அனாலிட்டிக்கல் ஜியோமெட்ரி (Analytical Geometry),

டிஃபரென்ஷியல் கால்குலஸ் (Differential Calculus) இன்டகிரெல் கால்குலஸ் அண்ட் டிஃபரென்ஷியல் ஈகுவேஷன் (Calculus and Differential Equation) வெக்டர் அல்ஜிப்ரா (Vector Algebra), ஸ்டேட்டிஸ்டிக்ஸ் அண்ட் புராபபெலிட்டி (Statistics and Probublity) இவையிருக்கும். இரண்டாவது தாளில் A-பிரிவில் ஆங்கிலமும், B-பிரிவில் பொது அறிவும் இருக்கும். பொது அறிவுப் பிரிவில், இயற்பியல், வேதியியல், பொது அறிவியல், வரலாறு, சுதந்திர போராட்டம், புவியியல், தற்கால நிகழ்வுகள் இவை இடம்பெறும்.

இந்தப் பிரிவில் வினாக்கள் 25%, 15%, 10%, 20%, 20%, 10% என்ற வகையில் இருக்கும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சர்வீஸ் செலக்ஷன் போர்டு (Service Selection) Board) நடத்தும் - 5 நாட்களுக்கான இண்டலிஜென்ட்ஸ், பர்சனாலிட்டி டெஸ்டிற்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வு இரண்டு நிலைகளாக நடைபெறும்.

முதல் நிலையில் ஆபீசர் இண்டலிஜென்ட்ஸ் ரேட்டிங் (Offiecer Intelligence Rating-OIR) பிக்சர் பர்சப்ஷன் அண்ட் டிஸ்கிரிப்ஷன் டெஸ்ட் (Picture Perception & Description Test - PP& DT) என்ற தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் இரண்டாம் நிலைக்கு அனுப்பப்படுவார்கள். இரண்டாம் நிலையில், இன்டர்வியூ, குரூப் டெஸ்டிங் ஆபீசர் டாஸ்க் (Interview, (Group Testing Officer Task) உளவியல் தேர்வு (Pcychology Test) மற்றும் கருத்தரங்கத் தேர்வு (Conference) போன்றவை இருக்கும்.
 
தொடர்பிற்கு
 
இணையதள முகவரிகள்
 
www.joinindianarmy.nic.in.
www.joinindiannavy.gov.in
www.careerairforce.nic.in
www.upsc.gov.in.
Phone: 011-2335271/017-23381124
            011-2309843
 
தரைப்படை

Army Head Quarters,
AG’s Branch,
RTG(NdA Entry),
West Block - III
wing-I
R.K.Puram. New Delhi-110 066
தொலைபேசி: 26175473
 
கடற்படை
 
Naval Head Quarters,
Directorate of Man power
& Recruitment,
O.I.&R Section,
Room No: 204, C-wing,
Sena Bavan,
New Delhi-110 011.
தொலைபேசி: 23010097
 
விமானப்படை
 
Air Head Quarters,
Directorate of Personnel (Officers)
PO 3. Room 17,
J Block,
Opp Vayu Bavan,
Motilal Nehru marg
New Delhi-110106
தொலைபேசி: 23010231

மேலும்

X