இந்தியப் புள்ளியியல் நிறுவனப் படிப்புகளில் சேர ISI TEST 2019!

2/6/2019 4:03:44 PM

இந்தியப் புள்ளியியல் நிறுவனப் படிப்புகளில் சேர ISI TEST 2019!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute) செயல்பட்டுவருகிறது. மேலும் இதன் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, தேஜ்பூர், சென்னை, ஐதராபாத் வளாகங்களில் இருக்கும் புள்ளியியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் தொடர்புடைய படிப்புகளில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

படிப்புப் பிரிவுகள்

இந்நிறுவனத்தில் புள்ளியியலில் B.Stat (Hons), M.Stat எனும் பட்டப்படிப்புகளும், கணிதவியலில்  B.Math (Hons), M.Math எனும் பட்டப்படிப்புகளும் மற்றும்  MS (Quantitative Economics), MS (Quality Management Science), MS (Library Information Science), M.Tech. (Computer Science), M.Tech (Quality, Reliability & Operations Research) எனும் இரண்டு வருட கால முதுநிலைப் பட்டப்படிப்புகளும், P.G.D.S.M & A,  P.G.D.C.A எனும் ஒரு வருட கால முதுநிலைப் பட்டயப் படிப்புகளும், P.G.D.B.A எனும் இரண்டு வருட கால முதுநிலைப் பட்டயப் படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

புள்ளியியல் (Statistics), கணிதம் (Mathematics), அளவறி பொருளியல் (Quantitative Economics), கணினி அறிவியல் (Computer Science), தரம், நம்பிக்கை மற்றும் இயக்கங்களுக்கான ஆய்வு (Quality, Reliability & Operations Research - QR&OR)), இயற்பியல் (Physics), வேளாண்மை மற்றும் சூழலியல் (Agriculture & Ecology), நிலவியல் (Geology), நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (Library and Information Science), மொழியியல் (Linguistics), சமூகவியல் (Sociology), உளவியல் (Psychology) எனும் 12 துறைகளிலான ஆய்வுப்படிப்புகளும் இருக்கின்றன.

தேவையான கல்வித்தகுதி

B.Stat, B.Math ஆகிய இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் கணிதம் (Mathematics) மற்றும் ஆங்கிலம் (English) பாடங்களை எடுத்துப்   படித்திருக்க வேண்டும். M.Stat படிப்பிற்கு B.Stat அல்லது B.Math அல்லது புள்ளியியலை முதன்மைப் பாடமாகக் கொண்டு மூன்று வருடப்  பட்டப்படிப்பு அல்லது பொறியியல் பட்டம் அல்லது ISI வழங்கிய முதுகலைப் பட்டயப்படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

M.Math படிப்பிற்கு B.Stat அல்லது B.Math அல்லது கணிதத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு மூன்று வருடப் பட்டப்படிப்பு அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS (Quantitative Economics) படிப்பிற்குக் கணிதம், இயற்பியல், புள்ளியியல், பொருளாதாரம் பாடத்தில் இளநிலைப் பட்டம் அல்லது B.Stat பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS (Quality Management  Science) படிப்பிற்கு கணிதம் அல்லது பொறியியலில் இளநிலைப்  பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS (Library Information Science) படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

M.Tech. (Computer Science) படிப்பிற்கு கணிதம், புள்ளியியல், இயற்பியல், மின்னணு அறிவியல், கணினி அறிவியல், கணினிப் பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுநிலைப்பட்டம் அல்லது B.E / B.Tech / AMIE போன்ற பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

M.Tech (Quality, Reliability & Operations Research)  படிப்பிற்கு புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் அல்லது புள்ளியியல் பாடம்  ஒன்றையும் கொண்டு கணிதவியலில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். P.G.D.S.M& A, P.G.D.C.A, P.G.D.B.A எனும் மூன்று வகையான முதுநிலைப் பட்டயப்படிப்புகளுக்கும், 12 துறைகளிலான ஆய்வுப்படிப்புகளுக்கும் தேவையான கல்வித்தகுதி குறித்த      விவரங்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன.  
 
நுழைவுத்தேர்வு

இந்தப் படிப்புகள் அனைத்துக்கும் தனித்தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நுழைவுத்தேர்வினை எழுதுவதற்கு http://www.isical.ac.in/~admission எனும் இணையதளம் வழியாக 5.2.2019 முதல் விண்ணப்பிக்க முடியும். இத்தேர்வுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.1000, எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆய்வுப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தினை இணையம் வழியிலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளைகளில் நேரடியாகவும் செலுத்தமுடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 12.3.2019.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 19.3.2019.  

தேர்வு மையங்கள்

இந்த நுழைவுத்தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை உட்பட நாடு முழுவதும் 29 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு 12.5.2019 அன்று நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை பத்து நாட்களுக்கு முன்பாக இந்நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

நுழைவுத் தேர்வு, முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள், பாடத்திட்டங்கள், சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கொல்கத்தா 033-25752500, பெங்களூரு 080-28483002, சென்னை 044-23740612, டெல்லி 011 - 41493900, ஐதராபாத் 040-27153984, தேஜ்பூர் 037-12267296 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும், admissionsupport@isical.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டும் பெறலாம்.
இந்நிறுவனத்தின் www.isine.ac.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.  

- எம்.எஸ்.மணி

X