பேச்சு மற்றும் கேட்கும் திறன் சிறப்பு படிப்புகளில் சேர AIISH2019 நுழைவுத் தேர்வு!

4/3/2019 2:38:47 PM

பேச்சு மற்றும் கேட்கும் திறன் சிறப்பு படிப்புகளில் சேர AIISH2019 நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் இயங்கும் ‘ALL India Institute of Speech and Hearing’ என்ற தன்னாட்சி கல்விநிறுவனம் மைசூரில் உள்ளது. இக்கல்வி நிறுவனம் பேசும் திறன் குறைவு மற்றும் காது கேளாமை தொடர்பான பல்வேறு படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை AIISH-2019 என்ற நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும். இனி வழங்கப்படும் படிப்புகளும் தேவையான தகுதிகளும் பற்றி பார்ப்போம்…

BASLP - Bachelar of Audiology Speech Language Programme

இது நான்காண்டு காலப் படிப்பு. இதில் 62 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கு +2வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பிற்கு மாதந்தோறும் ரூ.800 ஊக்கத்தொகை வழங்கப்படும். இப்படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் உள்ள குழுவை +2வில் எடுத்து படித்த பொதுப்பிரிவினராயின் குறைந்தது 50 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினராயின் 45 விழுக்காடும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்கள் எடுத்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இப்படிப்பிற்குத் தகுதியான மாணவர்கள் பொது நுழைவுத்தேர்வின் வழியே தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத்தேர்வில் 50 வினாக்களுக்கு 50 மணித்துளிகளில் விடையளிக்க வேண்டும். உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் என்ற நான்கு பாடங்களில் இயற்பியல், வேதியியல் ஆகியவற்றைக் கட்டாயப் பாடமாகவும், உயிரியல் அல்லது கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்திலிருந்தும் விடை தரவேண்டும்.

இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று தேர்வு செய்து தேர்வு எழுத வேண்டும். நான்காம் பாடம் எது வேண்டுமானாலும் எடுத்துப் படித்திருக்கலாம். சென்னையில் தேர்வு மையம் அண்ணாநகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியாகும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.325 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு 18.5.2019 காலை 9 மணிக்கு நடைபெறும்.

B.Ed., Sp.Ed. (Hearing Impairment)

இது 4 செமஸ்டர்கள் கொண்ட, இரண்டு வருடப் படிப்பாகும். இது காது கேளாத மாணவர்களைப் பயிற்றுவிக்கும் முறைகளைக் கற்பிக்க உதவும். இப்படிப்பில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் குறைந்தது பொதுப்பிரிவினர் 50 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 விழுக்காடும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு 30. வேறு பணியிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு 10 ஆண்டுகள் தளர்த்தப்படும்.இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.325 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இப்படிப்பிற்கு நுழைவுத்தேர்வு இல்லை.

முதுநிலைப் படிப்புகள்

1) எம்.எஸ்சி. (ஆடியோலஜி) - 2 வருடம்
2) எம்.எஸ்சி. (ஸ்பீச் பேத்தாலஜி அண்ட் லாங்குவேஜ்) - 2 வருடம்
3) எம்.எட். (ஸ்பெஷல் எஜுகேஷன்) - 2 வருடம்

எம்.எஸ்சி. (ஆடியோலஜி): இதில் சேர பி.எஸ்சி. (ஸ்பீச் அண்ட் ஹியரிங்) அல்லது பி.எ.எஸ். எல்.பி. பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.எம்.எஸ்சி.(ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ்): இத்துறை படிப்பில் ஏதேனும் ஒரு இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த இரண்டு படிப்புகளுக்கும் மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1300 வழங்கப்படும். எம்.எட். (ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பேர்மெண்ட்) படிப்பிற்கு விண்ணப்பிக்க பி.எட். (ஹியரிங் இம்பேர்மென்ட்) அல்லது பி.எஸ்.எட் (ஹியரிங் இம்பேர்மென்ட்) அல்லது பி.எட். (ஸ்பெஷல் எஜுகேஷன்) முடித்திருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கான மாணவர்கள் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்படிப்புகளுக்குப் பொதுப்பிரிவினர் ரூ.400, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.325 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

முனைவர் படிப்புகள்               காலம்                                    அடிப்படைத் தகுதி

Ph.D (SLP) -JRF              3                            MSc. (SLP/M.Sc.(Aud)/M.Sc.(Sp&Hs)/MASLP (1 Year Experience)
PLD (AUD) JRF              3                            MSc.(Aud)/M.Sc.(SLP)/ M.Sc.(Sp&HS)/MALP (1 Year Experience)
PLD (Speech, hearing)     3                            M.Sc.(SLP)/M.Sc.(Aud)/M.Sc.(Speech)/MASLP  (1 Year Experience)

இப்படிப்புகளுக்கு முதல் ஆண்டு ரூ.20,000, இரண்டாம் ஆண்டு ரூ.22000, மூன்றாம் ஆண்டு ரூ.25000 ஊக்கத் தொகையும், இவற்றுடன் HRA (ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்) தரப்படும். இத்துடன் ஆண்டிற்கு 20,000 கண்டிஜென்ஸி கிராண்டு ரூ.20,000 வழங்கப்படும். தகுதியான மாணவர்கள் நுழைவுத்தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.625, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.425 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதுநிலைப் பட்டயப் படிப்புகள்

படிப்பு P.G. Diploma                                             காலம்            அடிப்படைத் தகுதி     மாத ஊக்கத் தொகை
Augmentative and Alternative Communicate           1 Year         B.Sc., (Sp & Ctg) B.Aslp/BSEd         500/-
Climcilinguistics for Speech-Language Pathology   1 Year         B.Sc., (Sp &Hs) B.Aslp                      500/-
Forensic Speech Science in Technology                    1 Year        B.Sc., (SP/HS) B.ASLP                      500/-
Neuro Avidiology                                         1 Year                       B.Sc., (SP/HS) B.ASLP                     500/-

இப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை. பொதுப்பிரிவினர் ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.325 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். பட்டயப் படிப்புகள் இப்படிப்புகளுக்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.325 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


படிப்பு P.G. Diploma                                 காலம்           அடிப்படைத் தகுதி        மாத ஊக்கத் தொகை

Hearing Aid & Ear Mould Tech                  1 Year                  +2/Dip In Electronics, ITI                  250/-

Early Childhood Spl Education
(Hearing Impaired)                                       1  Year                 +2 / Equivalent                                  250/-

Hearing Language Speech Through
Video Conference                                          1 Year                  +2 (Science Stream)                          250/-

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டம், பட்டயம், முதுநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கு www.aiishmysore.in என்ற இணையம் வழியாக 29.4.2019 அன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிய, www.uni.mysore.ac.in என்ற இணையத்தைப் பார்க்கவேண்டும்.

மேலும்

X