விண்வெளி அறிவியலில் ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்!

4/17/2019 4:55:35 PM

விண்வெளி அறிவியலில் ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய விண்வெளித்துறையின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாய், 1947ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் Physical Research Laboratory (PRL) ஆய்வு மையத்தை தொடங்கிவைத்தார். விண்வெளி மற்றும் அது சார்ந்த அறிவியல் துறைகளுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனமாக கருதப்படும் இந்நிறுவனம் இந்திய அரசின் விண்வெளித்துறையின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டுவருகிறது.

இங்கு Astronomy and Astrophysics, Atmospheric Sciences and Aeronomy, Earth Sciences, Solar System Studies and Theoretical Physics என பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்நிறுவனத்தில் விண்வெளி சார்ந்த பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் படிக்க விரும்புபவர்களுக்கு ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் வழங்கப்பட உள்ளது.

ஃபெல்லோஷிப்

முனைவர் ஆய்வை Astronomy & Astrophysics, Atomic, Molecular and Optical Physics, Geosciences, Planetary Science, Solar Physics மற்றும் Theoretical Physics போன்ற துறைகளில் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கான ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசின் விண்வெளித்துறை விதிகளின்படி ஆண்டுக்கு ரூ. 10,000 என ஐந்து ஆண்டுகள் ஃபெல்லோஷிப் வழங்கப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் அறிவியல் அல்லது எஞ்சினியரிங் துறைகளில் 60% தேர்ச்சியுடன் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.   விண்ணப்பதாரர்கள் 2017ம் ஆண்டுக்கு பின் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். இவ்வாண்டு முதுகலைப் பட்டம் முடிக்கவுள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். மேலும் விண்ணப்பதாரர்கள் CSIR-UGC , NET, GATE, JEST போன்ற ஏதாவது ஒரு தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31.12.2018 தேதியின்படி 25 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வயதுவரம்பு தளர்ச்சி ஏதும் வழங்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.prl.res.in/prl-eng/ என்ற இணையதளம் சென்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 20.4.2019.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

இளங்கலை, முதுகலை மற்றும் தேசிய நுழைவுத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் முழு விவரங்களுக்கு https://www.prl.res.in/prl-eng/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

- துருவா

X