ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் மல்டிடாஸ்க்கிங் தேர்வு

4/23/2019 4:20:54 PM

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் மல்டிடாஸ்க்கிங் தேர்வு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மல்டிடாஸ்க்கிங் தேர்வு

மத்திய அரசின் பணிகளில் சேர்ந்து பணியாற்ற, தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க எஸ்.எஸ்.சி. (SSC) என அழைக்கப்படும் ‘ஸ்டாஃப் செலக் ஷன் கமிஷன் (Staff Selection Commission), நடத்தும் தேர்வுகளான -
1. கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வு (Combined Graduate Level Examination (CGLE))
2. கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் தேர்வு (Combined Higher Secondary Level (10th/+2)Examination)
3.  கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு (Constable [General Duty] Examination)
4. ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ அண்ட் ‘டி’ தேர்வு (Stenographer Grade ‘C’ and ‘D’ Examination) - ஆகிய தேர்வுகளைப் பற்றி கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம்.

இனி இந்த இதழில் SSC நடத்தும் ‘மல்டிடாஸ்க்கிங் தேர்வு’ (Multitasking (Non-Technical Staff) Examination) பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.
மல்டிடாஸ்க்கிங் தேர்வு (Multitasking  (Non-Technical Staff) Examination) ஒருவர் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபடும் சூழலை ‘மல்டிடாஸ்க்கிங்’ (Multitasking) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அதாவது, ‘பன்முகப் பணிகள் செய்தல்’ என்பது இதன் பொருளாகும். எஸ்.எஸ்.சி. நடத்தும் ‘மல்டிடாஸ்க்கிங் தேர்வு (Multitasking (Non-Technical Staff) Examination) கீழ்க்கண்ட பன்முகப் பணிகளுக்காக நடத்தப்படுகிறது.

மத்திய அரசு அமைப்புகளிலுள்ள பணிகள்

*  பதிவேடு பாதுகாத்தல் (Physical maintenance of records of the section)
* சுத்தமான நிலையில் பிரிவுகளைப் பராமரித்தல் (General cleanliness and upkeep of the section / unit)
* கோப்புகள் மற்றும் இதர தாள்களை நகல் எடுத்தல் (Copying of files and other papers within the building)
* ஃபேக்ஸ் தகவல்களை நகல் எடுத்தல் (Photocopying sending of FAX etc)
* பிரிவிலுள்ள எழுத்துசாரா பணிகள் (Other non-clerical work in the sections/unit)
* அன்றாட அலுவலகப் பணிகளுக்கு உதவுதல் (டைரி எழுதுதல், கடிதம், கோப்புகள் அனுப்புதல், கம்ப்யூட்டர் இயக்குதல்) (Assisting in routine office work like a diary, dispatch etc. Including on computer)
* அஞ்சல் தொகுப்புகளை உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள பிரிவுகளுக்கு விநியோகம் செய்தல் (Delivering of Dak [Inside and outside the building])
* சுற்றுக்காவல் பணிகள் (Watch and ward duties)
* அறைகளை திறந்து மூடுதல் (Opening and closing of rooms)
* அறைகளை சுத்தப்படுத்துதல் (Cleaning of rooms)
* அறைகளிலுள்ள மரப்பொருட்களுக்கு மருந்து தெளித்தல் (The dusting of furniture etc)
* கட்டிடங்களை சுத்தப்படுத்துதல் (Cleaning of the building, fixture etc)
* ஐ.டி.ஐ. தகுதியோடு தொடர்புடைய பணிகள் (Work related to his ITI qualification [if it exists])
* வாகனங்கள் ஓட்டுதல் (Driving of vehicles [if in possession of the valid driving license])
* பூங்காக்கள், புல்வெளிகள் மற்றும் செடிகள் பராமரித்தல் (Upkeep of parks, lawns, potted plants etc.
* மேற்பார்வையாளர் வழங்கும் இதரப் பணிகளைச் செய்தல் (Any other work assigned by superior authority)
- ஆகிய பணிகளுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

வயது விவரம்

மல்டிடாஸ்க்கிங் தேர்வு எழுத விரும்புபவர்களின் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மாறுபடும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (SC/ST) அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, 30 வயது வரை இந்தத் தேர்வை எழுதலாம். இதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (OBC) அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

இவர்கள் 28 வயது வரை இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்புத் (10th) தேர்வில் (SSLC) வெற்றி பெற்றவர்களும், அதற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்தத் தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

தேர்வுக் கட்டணம்

இத்தேர்வை எழுதுவதற்கான தேர்வுக் கட்டணம் ரூபாய் 100 செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமுறை

இந்தத் தேர்வு 2 தாள்களில் நடத்தப்படும். அவை -

1.தாள்-1 தேர்வு (Paper - I Examination) கொள்குறி வினா வகை கேள்விகள் (Objective Type)
2.தாள்-2 தேர்வு (Paper - II Examination) விரிவான விளக்க வகை  (Descriptive Type)
தாள்-I தேர்வு (Paper-I Examination)
தாள்-1 தேர்வு நான்கு பிரிவுகளில் (Parts) நடத்தப்படும். அவை -
    
அனைத்தும் ‘கொள்குறி வகை வினா’ (Objective Type) அமைப்பில் இடம்பெறும். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக் கும். தவறான பதில் (Wrong Answers) எழுதியிருந்தால், அந்தக் கேள்விக்காக 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதனை கருத்தில்கொண்டு மிகவும் கவனமாக சரியான பதிலை தேர்வில் எழுதுவது நல்லது. எனவே, விடைகள் சரியாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே விடையளிப்பது சிறந்ததாகும். இத்தேர்வில் கால்குலேட்டர் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தாள்-II தேர்வு (Paper-II Examination)

இத்தேர்வு விரிவான ‘விளக்க விடைத் தேர்வு’ (Descriptive Type Test) ஆகும். இத்தேர்வில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 8ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மொழிகளில் (Indian Languages) எழுத வேண்டியது அவசியமாகும். இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 50. இத்தேர்வு எழுத மொத்தம் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம்

தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கு சரியான முறையில் விடையளிக்க விரும்புபவர்கள் முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.

1.பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை  (General Intelligence and Reasoning)  

பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை பிரிவில் - Analogy, Classification, Missing Number, Matrix, Word Formation, Coding - Decoding, Simplification, Arrangement of Words, Blood Relation, Distance and Direction, Number/Word Series இருந்து கேள்விகள் இடம்பெறுகின்றன.

நான்-வெர்பல் (Non-verbal) - பகுதியில் (Paper Cutting and Folding, Mirror and Water Image, Embedded Figures, Figure Completion, Counting) Embedded Figures, Figure Completion, Counting of Figure ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறுகின்றன. வெர்பல் (Verbal) பகுதியில் - Statement Conclusion, Assertion and Reason, Statement and Inference, Arguments  - போன்றவற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறும்.

2.கணிதத்திறன் (Numerical Aptitude)

கணிதத்திறன் பிரிவில் Ratio and Proportion, Percentage, HCF and LCM, SI and CI, Profit, Loss and Discount, Time and Work, Time, Distance and Speed, Average, Problem on ages, Number System, Number Series, Data Interpretation, Mensuration, Geometry, Mixture and Alligation, Trigonometry - போன்றவற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறும்.

3.பொது விழிப்புணர்வு (General Awareness)

பொது விழிப்புணர்வு பிரிவில் - வரலாறு (History), புவியியல் (Geography), அரசியல் (Polity), பொருளாதாரம் (Economics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology), இயற்பியல் (Physics), கம்ப்யூட்டர் (Computer), தற்கால நிகழ்வுகள் (Current Affairs), முக்கிய தினங்கள் (Important dates), விளையாட்டு (Sports), பரிசுகள் (Awards), திட்டங்கள் (Schemes), நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (Books and Authors) போன்றவற்றிலிருந்து கேள்விகள் வடிவமைக்கப்படும்.

4.பொது ஆங்கிலம் (General English)

பொது ஆங்கிலம் பிரிவில் Reading Comprehension, Fill in the blanks, Error Spotting, Sentence Correction, Synonym and Antonym, Idioms and Phrases, One Word Substitution, Spelling Error - போன்ற பாடப்பகுதிகளிலிருந்து கேள்விகள் இடம்பெறும்.

மேலும் அதிக விவரங்கள் பெற…

மல்டிடாஸ்க்கிங் (Multitasking [Non-Technical] Examination) தேர்வுகளுக்கான கல்வித் தகுதி, பாடத்திட்டங்கள் பற்றிய அதிகமான விவரங்களைப் பெறவும், விண்ணப்பங்கள் அனுப்பவும் www.ssconline.nic.in மற்றும் www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு:
The Regional Director (SR),
Staff Selection Commission,
IInd Floor, EVK Sampath Building,
DPI Campus, College Road,
Chennai - 600 006,  Tamil Nadu.
www.sscsr.gov.in - என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

(தொடரும்,,.)

- நெல்லை கவிநேசன்

மேலும்

X