மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் சேர CIFNET -2019 நுழைவுத் தேர்வு

5/8/2019 5:27:42 PM

மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் சேர CIFNET -2019 நுழைவுத் தேர்வு

நன்றி கல்வி-வேலை வழிகாட்டி

மத்திய மீன்வளக் கப்பல்துறை அறிவியல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் (Central Institute of Fisheries Nautical and Engineering Training) இந்திய அரசால் கேரள மாநிலம், கொச்சியில் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இதில் இடம்பெற்றிருக்கும் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: இந்நிறுவனத்தில் நான்கு ஆண்டு கால அளவிலான மீன்வள அறிவியல் (கப்பல்துறை அறிவியல்) இளநிலைப் பட்டப்படிப்பு (Bachelor of Fishery Science (Nautical Science)), இரண்டு ஆண்டு கால அளவிலான கப்பல் மாலுமிப் பயிற்சி (Vessel Navigator Course (VNC)) மற்றும் கடல்சார் பொறியியல் பொருத்துநர் பயிற்சி (Marine Fitter Course (MFC)) ஆகிய தொழிற்சான்றிதழ் படிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.  

 இளநிலைப் பட்டப்படிப்பு: மீன்வள அறிவியல் (கப்பல்துறை அறிவியல்) இளநிலைப் பட்டப்படிப்பில் (Bachelor of Fishery Science (Nautical Science)) மொத்தம் 40 (General-1, NRI-1, Foreign National-1, Lateral Entry System-7) இடங்கள் இருக்கின்றன. இப்படிப்புச் சேர்க்கைக்கு +2 தேர்வில் ஆங்கிலம் (English), கணக்கு (Mathematics) மற்றும் அறிவியல் பாடங்களில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டு தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்களுக்கு 1.10.2019 அன்று 17 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்நிறு வனத்தின் http://cifnet.gov.in எனும் இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொண்டு இணையம் வழியாக (Online) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.250 வங்கி வரைவோலையை (Demand Draft) “Senior Administrative Officer, CIFNET” எனும் பெயரில் “Ernakulam” என்ற இடத்தில் மாற்றிக்கொள்ளக்கூடியதாகப் பெற்று அனுப்ப வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பத்தை முழுமையாக நிறைவு செய்த பின்பு, அதனை பிரின்ட்-அவுட் எடுத்துத் தேவையான சான்றிதழ் நகல்கள், வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து ‘‘Director, Central Institute of Fisheries, Nautical and Engineering Training (CIFNET), Fine Arts Avenue, Fore Shore Road, Kochi-682016” எனும் முகவரிக்கு 16.5.2019 ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு: இப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Test) 8.6.2019 அன்று நடத்தப்படும். மாணவர் சேர்க்கை: நுழைவுத் தேர்வுக்குப் பின்னர் நேர்காணல் ஒன்று நடத்தப்படும். அதன் பிறகு, நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் (50%), +2 மதிப்பெண்கள் (40%), நேர்காணல் (10%) எனக் கணக்கிடப்பட்டு, இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வணிகம் சார்ந்த கடல் துறையினால் (Mercantile Marine Department) நடத்தப்படும் பார்வை தகுதித் தேர்வில் (Vision Eye Test) தேர்ச்சி பெற்ற பின்பு சேர்க்கை உறுதி செய்யப்படும்.

தொழிற்சான்றிதழ் படிப்பு: இந்நிறுவனத்தின் தொழிற்சான்றிதழ் படிப்புகள் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய மூன்று பயிற்சி மையங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. கப்பல் மாலுமிப் பயிற்சிக்கு (Vessel Navigator Course (VNC)) கொச்சி  16 இடங்கள், சென்னை  16 இடங்கள், விசாகப்பட்டினம்  16 இடங்கள் என்று மொத்தம் 48 இடங்கள் இருக்கின்றன. இதேபோல் கடல்சார் பொறியியல் பொருத்துநர் பயிற்சியிலும் (Marine Fitter Course (MFC)) 48 இடங்கள் இருக்கின்றன.

இப்படிப்புச் சேர்க்கைக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வில் ஆங்கிலம் (English), கணக்கு (Mathematics) மற்றும் அறிவியல் பாடங்களில் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டு தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்களுக்கு 1.10.2019 அன்று 16 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/
எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்நிறுவனத்தின் http://cifnet.gov.in எனும் இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பத்திற்கான நடைமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொண்டு இணையம் வழியாக (Online) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.300, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.150 வங்கி வரைவோலையை (Demand Draft) “Senior Administrative Officer, CIFNET” எனும் பெயரில் “Ernakulam” எனுமிடத்தில் மாற்றிக்கொள்ளக்கூடியதாகப் பெற்று அனுப்ப வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பத்தை முழுமையாக நிறைவு செய்த பின்பு, அதனை பிரின்ட்-அவுட் எடுத்துத் தேவையான சான்றிதழ் நகல்கள், வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து ‘‘Director, Central Institute of Fisheries, Nautical and Engineering Training (CIFNET), Fine Arts Avenue, Fore Shore Road, Kochi-682016” எனும் முகவரிக்கு 16.5.2019 ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு: இப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, பாட்னா, வேராவல், மங்களூர், போர்ட்பிளேர், பெர்ஹாம்பூர் ஆகிய நகரங்களில் பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Test) 22.6.2019 அன்று நடத்தப்படும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை: விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வு மற்றும் 10ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை கொண்டு, இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கப்பல் மாலுமிப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வணிகம் சார்ந்த கடல் துறையினால் (Mercantile Marine Department) நடத்தப்பெறும் பார்வை தகுதித் தேர்வில் (Vision Eye Test) தேர்ச்சி பெற்ற பின்பே சேர்க்கை உறுதி செய்யப்படும். இப்பயிற்சிக்குத் திறந்தவெளிச் சேர்க்கையில் (Open Selection) சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 படிப்பு உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: இப்படிப்புகளுக்கான பயிற்சிக் கட்டணம், விடுதி வசதிகள் மற்றும் உணவுக் கட்டணம் உள்ளிட்ட மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம் அல்லது “Central Institute of Fisheries Nautical and Engineering Training, (CIFNET), Dewan’s Road, Kochi - 682016” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 0484 - 2351493, 2351790, 2351610 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ பெற்றுக்கொள்ளலாம்.

தொழிற்சான்றிதழ் படிப்பு குறித்த தகவலை சென்னையில் “Central Institute of Fisheries, Nautical & Engineering Training (CIFNET), No. 59, S.N.Street, Royapuram, Chennai - 600013” எனும் முகவரியிலிருக்கும் பயிற்சி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது இந்நிறுவன அலுவலகத்தின் 044-25952691, 25952692 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.  

பேக்கேஜிங் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மாணவர் சேர்க்கை!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங் கல்வி நிறுவனம் மத்திய அரசின்கீழ் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்திற்கு டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் மையங்கள் உள்ளன. இதில் போஸ்ட் கிராஜுவேட்  டிப்ளமோ இன் பேக்கேஜிங் என்ற 2 ஆண்டுகள் கொண்ட முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கல்வித் தகுதி: அறிவியல், கணிதம், மைக்ரோபயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, வேளாண்மை, ஃபுட் சயின்ஸ், பாலிமர் சயின்ஸ், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முழுநேர படிப்பாக இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை நேரடியாக சென்னை உட்பட 6 இடங்களில் உள்ள ஐ.ஐ.பி., கல்வி நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை: ஐ.ஐ.பி., கல்வி நிறுவனத்தால் பிரத்யேகமாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 13.6.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் 7.6.2019. மேலும் விவரங்களுக்கு www.iip-in.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-T.S.மணி

X