சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைப் படிப்புகளில் சேர IIAT-2019 நுழைவுத் தேர்வு

5/9/2019 4:29:09 PM

சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைப் படிப்புகளில் சேர IIAT-2019 நுழைவுத் தேர்வு

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

நுழைவுத் தேர்வு

இந்திய அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் (Ministry of Tourism, Government of India) கீழ் தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது இந்தியச் சுற்றுலா மற்றும் (Indian Institute of Tourism and Travel Management ) பயண மேலாண்மை நிறுவனம். இங்கு இடம்
பெற்றிருக்கும் மேலாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: இந்நிறுவனம் குவாலியர், நொய்டா, புபனேஸ்வர், நெல்லூர், கோவா (Gwalior, NOIDA, Bhubaneswar, Nellore, Goa) ஆகிய ஐந்து இடங்களில் மையங்களைக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் மத்தியப்பிரதேசம் மாநிலம், அமர்காந்தக்கிலிருக்கும் இந்திராகாந்தி தேசியப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்துடன் (Indira Gandhi National Tribal University, Amarkantak, Madhya Pradesh) இணைந்து இந்த 5 மையங்களில் சுற்றுலா மற்றும் பயணம் குறித்த மேலாண்மைப் படிப்புகளை நடத்திவருகிறது.

இம்மையங்களில் மூன்று வருட கால அளவிலான இளநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புகளில் (BBA - Tourism & Travel) 240 இடங்களும், இரண்டு வருட கால அளவிலான முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புகளில் (MBA - Tourism & Travel) 600 இடங்களும் இருக்கின்றன.

இளநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: இளநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டு +2 தேர்வு எழுதியவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் இந்நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை (IGNTU IITTM Admission Test - IIAT) எழுத வேண்டியிருக்கும்.

இளநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 1.7.2019 அன்று 22 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.   

விண்ணப்பிக்கும் முறை: இளநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://iittm.net என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, அதனுடன் பொதுப் பிரிவினர் ரூ.1000, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.500 என்று விண்ணப்பக் கட்டணத்தை “Director IITTM” எனும் பெயரில் “Gwalior” எனுமிடத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வரைவோலை பெற்று அதையும் இணைத்து, “Chairman, Admission (BBA-TT), Indian Institute of Tourism and Travel Management (IITTM), Govindpuri, Gwalior, M.P. (India) - 474011” எனும் முகவரிக்கு 17.5.2019 ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.     

நுழைவுத் தேர்வு: விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இந்நிறுவனத்தின் குவாலியர், புபனேஸ்வர், நொய்டா மற்றும் நெல்லூர் மையங்களில் 9.6.2019 அன்று நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு (IGNTU IITTM Admission Test - IIAT) நடத்தப்படும்.

பின்னர், இந்த நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் (Shortlisted) ஒன்று தயார்செய்து வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு மேற்காணும் மையங்களில் 17.6.2019 முதல் 21.6.2019 வரைக் குழுக்கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்காணல் (Interview) நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை: நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள்  70%, குழுக்கலந்தாய்வு  15%, நேர்காணல்  15% என்கிற மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான முதல் தகுதிப்பட்டியல் 28.6.2019 அன்றும், இரண்டாம் தகுதிப் பட்டியல் 19.7.2019 அன்றும் வெளியிடப்படும்.

இப்பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் 12.7.2019 ஆம் தேதிக்குள் தங்களது சேர்க்கைக்கான கட்டணத்தைச் செலுத்திச் சேர்க்கையினை உறுதி செய்திட வேண்டும். அப்படி உறுதி செய்யப்படாத நிலையில் ஏற்படும் காலியிடங்களுக்குக் காத்திருப்போர் பட்டியலிலிருந்து 22.7.2019 அன்று மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு செய்யப்படும்.  

அதன் பின்னர் உள் மாறுதல்கள் (Internal Transfers), ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றம், ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்திற்கானமாற்றம் ஆகியவற்றுக்கு 26.7.2019 அன்று வரை விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான முடிவுகள் 29.7.2019 அன்றுடன் நிறைவடையும். மாணவர் சேர்க்கைக்கான அனைத்துப் பணிகளும் 31.7.2019 அன்றுடன் முடிவுறும்.

 முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு (MBA - Tourism & Travel) அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு இளநிலைப் பட்டம் படித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

இளநிலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். இப்படிப்புடன் MAT / CAT / CMAT / XAT / ATMA ஆகிய நுழைவுத் தேர்வு ஒன்றில் தேர்வு எழுதி 1.5.2018 முதல் 30.4.2019 காலத்திற்குள்ளான நாட்களில் அதற்குரிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் நுழைவுத் தேர்வு எழுதாதவர்கள் இந்நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வினை எழுத வேண்டியிருக்கும்.

முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 1.7.2019 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்கவேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://iittm.net இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும், MAT / CAT / CMAT / XAT / ATMA ஆகிய நுழைவுத் தேர்வு மதிப்பெண் நகலினையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பொதுப் பிரிவினர் ரூ.1000, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.500 என்று விண்ணப்பக் கட்டணத்தை “Director  IITTM” எனும் பெயரில் “Gwalior” எனுமிடத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வரைவோலையாகப் பெற்று “Chairman, Admission (MBA-TT), Indian Institute of Tourism and Travel Management (IITTM), Govindpuri, Gwalior, M.P. (India) - 474011” எனும் முகவரிக்கு 17.5.2019 ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.  

நுழைவுத் தேர்வு: இந்நிறுவனத்தின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இந்நிறுவனத்தின் குவாலியர், புபனேஸ்வர், நொய்டா மற்றும் நெல்லூர் மையங்களில் 9.6.2019 அன்று இந்நிறுவனத்தின் நுழைவுத் தேர்வு (IGNTU IITTM Admission Test - IIAT) நடத்தப்படும். அதன் பிறகு, தகுதியுடைய நுழைவுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் (Shortlisted) ஒன்று தயார்செய்து வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மேற்காணும் மையங்களில் 17.6.2019 முதல் 21.6.2019 வரைக் குழுக்கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்காணல் (Interview) நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை: MAT / CAT / CMAT / XAT / ATMA அல்லது இந்நிறுவனத்தின் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்  70%, குழுக்கலந்தாய்வு  15%, நேர்காணல்  15% என்கிற மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான முதல் தகுதிப்பட்டியல் 28.6.2019 அன்றும் இரண்டாம் தகுதிப்பட்டியல் 19.7.2019 அன்றும் வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் 12.7.2019 ஆம் தேதிக்குள் சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்தித் தங்களது சேர்க்கையினை உறுதி செய்திட வேண்டும். உறுதி செய்யப்படாத நிலையில் ஏற்படும் காலியிடங்களுக்குக் காத்திருப்போர் பட்டியலிலிருந்து 22.7.2019 அன்று மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்படும்.

அதன் பின்னர் உள் மாறுதல்கள் (Internal Transfers), ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றம், ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்திற்கான மாற்றம் ஆகியவற்றுக்கு 26.7.2019 அன்று வரை விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான முடிவுகள் 29.7.2019 அன்றுடன் நிறைவடையும். மாணவர் சேர்க்கைக்கான அனைத்துப் பணிகளும் 31.7.2019 அன்றுடன் முடிவுறும்.

மேலும் விவரங்களுக்கு: இப்படிப்புகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம் அல்லது இந்நிறுவனத்தின் அனைத்து மையங்களின் அலுவலகத்திலும் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். இதுபோல், இந்நிறுவனத்தின் குவாலியர் - 0751-2437300, புபனேஸ்வர் - 0674-2472014/2472016, நொய்டா - 0120 - 2459100, நெல்லூர் - 0861  - 2353199 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் பெறலாம்.

தலைமை ஆசிரியர்களே பொறுப்பு!

நாடு முழுவதும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை தோல்வி அடையச்  செய்யக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து வகை பள்ளிகளிலும் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் சமூக நலத்துறை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றில் 6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை விதிமுறைகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும். தேர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட விதிகளை தளர்வு செய்தால் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு  அனுமதியைப் பெற வேண்டும். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் மட்டுமே மதிப்பெண் பதிவேடு மற்றும் மதிப்பெண் பட்டியலின் நகலை அளிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகளை மாவட்டக் கல்வி அலுவலர் ஒப்புதலைப் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். மேற்கண்ட பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும். இல்லையென்றால் பின்வரும் விளைவுகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

- T.S.மணி

மேலும்

X