உயிரித் தகவலியல் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு!

5/13/2019 3:36:13 PM

உயிரித் தகவலியல் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

உயிரித் தகவலியல் மற்றும் பயன்பாட்டு உயிரித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Institute of Bio informatics and Applied Bio technology) கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு வருட கால அளவிலான எம்.எஸ்சி (M.Sc - Bioinformatics & Applied Biotechnology) படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.  

வயது மற்றும் கல்வித் தகுதிகள் :

இப்படிப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கப் பொறியியல் (Engineering), மருத்துவம் (Medicine) மற்றும் அறிவியல் (Science) சார்ந்த இளநிலைப் பட்டப்படிப்புகளில்  (B.Tech, B.E, MBBS, BDS, B.Pharm, BAMS, B.Sc.,) தொடர்புடைய பாடங்களில் (Computer Science, Chemistry, Pharma, Physics, Mathematics, Statistics, Bio Technology, Zoology, Botany, Biochemistry, Microbiology, Agriculture, Medicine, Dentistry, Veterinary Sciences) தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மேற்கண்ட படிப்புகளில் ஜூலை 2019க்கு முன்பாகத் தேர்வு முடிவுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புடையவர்களும் இப்படிப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும். இப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://ibab.ac.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினைத் தரவிறக்கம் செய்தும் அனுப்பி வைக்கலாம்.

இணைய வழியில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக இந்திய மாணவர்கள் ரூ.500, என்.ஆர்.ஐ. மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ரூ.1000 இணையப் பணப்பரிமாற்ற முறையில் (NEFT) (Name of the Account: Institute of Bio informatics & Applied Bio technology, Account No: 036005011787, Type of Account: Current Account, Name of the Bank : ICICI, Bank Branch: Electronic City IFSC Code: ICIC0000360) இந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தவேண்டும்.

இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நிரப்பி அதனுடன் விண்ணப்பக் கட்டணத்தை “Institute of Bio informatics and Applied Bio technology” எனும் பெயரில் பெங்களூருவில் மாற்றிக் கொள்ளக்கூடிய வகையில் வங்கி வரைவோலையாகப் பெற்று அனுப்பி வைக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.5.2019.

நுழைவுத் தேர்வு :

விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இணையவழியில் நுழைவுத் தேர்வு நடத்தப்பெறும். இத்தேர்வினைச் சிறந்த கணினி மற்றும் இணையம் வசதியுடைய இடங்களிலிருந்தும், வீட்டிலிருந்தும்கூட எழுத முடியும்.  இந்த நுழைவுத் தேர்வுகள் 3.6.2019 முதல் 7.6.2019 வரை நடைபெற இருக்கிறது. இந்நாட்களில் ஒரு நாளைத் தேர்வு செய்து நுழைவுத் தேர்வினை எழுத முடியும்.   

நேர்காணல் :

நுழைவுத் தேர்வில் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பெறும். நேர்காணலுக்குப் பின்பு, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும்.

இது குறித்துக் கூடுதல் விவரங்களை அறிய, மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது “Admissions Office, Institute of Bio informatics and Applied Bio technology, Bio tech Park, Electronics City, Phase I, Bengaluru  560100, Karnataka” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது 080-28528900, 080-28528901, 080-28528902 எனும் தொலைபேசி வேலைநாட்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

- க.கதிரவன்

மேலும்

X