ஐடிஐ மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு!

5/16/2019 5:04:43 PM

ஐடிஐ மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் பொதுப்பயிற்சி மேலாண் இயக்குநரகமான டிஜிடி, தமிழக அரசின் வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையின்கீழ் மாநிலம் முழுவதும் 70 அரசு தொழில்நுட்பப் பயிற்சி மையங்களும், 490 தனியார் ஐடிஐ-க்களும் இயங்கி வருகின்றன.தற்போது மத்திய அரசின் டிஜிடி 2019 முதல் கம்ப்யூட்டர் மூலம் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஆன்லைன் தேர்வை ஐடிஐ பயிற்சிக்கு கட்டாயமாக்கியுள்ளது. இது ஐடிஐ பயிலும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஐடிஐ-க்களில் எலக்ட்ரீஷியன், ஒயர்மேன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், கம்பியாளர், வரைபடக்காரர், தோல் பொருள் உற்பத்தி என பல்வேறு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில் 8 முதல் 10ம் வகுப்பு பயின்றவர்கள் சேரலாம். இப்பயிற்சி 90 சதவீதம் செய்முறை சார்ந்ததே. தேர்வும் அதைப் போன்றதே. எழுத்துத் தேர்வும் அப்ஜெக்டிவ் முறையிலானது. தற்போது ஐடிஐ தேர்வுக்கு ஆன்லைன் நடைமுறையை அமல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் கம்ப்யூட்டர் தொடர்பான எந்தவித அடிப்படையும் அறியாத தங்களால் தேர்வை எதிர்கொள்வது கடினம் என்றும் ஐடிஐ பயிற்சி பெறும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

X