உயர்கல்வி நிறுவனங்களில் எஞ்சினியரிங் படிக்க JEE MAIN 2020 நுழைவுத் தேர்வு!

9/17/2019 4:07:01 PM

உயர்கல்வி நிறுவனங்களில் எஞ்சினியரிங் படிக்க JEE MAIN 2020 நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (Indian Institute of Information Technology) மற்றும் மத்திய அரசின் உதவிபெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (Centrally Funded Institutions - CFIS) BE/B.Tech, B.Arch, B.Planning போன்ற இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency) நடத்துகிறது. அதன்படி 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள (JEE MAIN 2020) தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த இரு தேர்வுகளையும், அல்லது ஏதேனும் ஒரு தேர்வையோ மாணவர்கள் எழுதலாம். இரண்டு தேர்வுகளையும் எழுதுகின்ற நிலையில், இரு தேர்வுகளில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அந்த மதிப்பெண் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.இந்த JEE மெயின் தேர்வின் தரவரிசையில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் JEE (Advanced) தேர்வை எழுத இயலும். JEE Advanced தேர்வின் தரவரிசையின் அடிப்படையில்தான் Indian Institute of Technology (IIT) நிறுவனங்களில் சேரமுடியும்.

விண்ணப்பிக்கத் தகுதி

JEE மெயின் தேர்விற்கு 2018 / 2019ம் ஆண்டுகளில் +2 தேர்ச்சி பெற்றவர்களும், 2020ம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதவிருப்போரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. ஆனால், JEE மெயின் தேர்ச்சி பெற்று, பின் JEE - Advanced தேர்ச்சி பெற்று பின் IIT-யில் சேர வயது வரம்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

B.E./B.Tech படிப்புகளுக்கு +2-ல் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கட்டாயப் பாடங்களாகவும், வேதியியல், உயிர்த்தொழில்நுட்பம், உயிரியல், டெக்னிக்கல் வொக்கேஷனல் பாடங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
B.Arch படிப்பிற்கு +2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

B.Planning படிப்பிற்குக் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாநில, மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற +2 மற்றும் தேசிய திறந்தவெளிப் பள்ளி (NIOS-National Institute of Open School) வழியாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறை

இதில் B.E/B.Tech படிப்புகளுக்கு கணினி வழியிலும் (Computer Based Test - CBT), B.Arch-ல் பகுதி I (கணிதம்), பகுதி II (Aptitude Test-நுண்ணறிவுத் தேர்வு), கணினி வழியிலும், வரைதல் (Drawing post) A-4 காகிதத்தில் ஆஃப்லைனிலும், B.Planning படிப்புக்குப் பகுதி I (கணிதம்), பகுதி II (நுண்ணறிவுத் தேர்வு), பகுதி III (பிளானிங்) இவை கணினி வழியிலும் நடைபெறும். வினாத்தாள் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் இருக்கும்.

பாடத்திட்டம் மற்றும்வினாத்தாள் வடிவம்

* B.E/B.Tech படிப்பிற்குக் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இது கணினி வழித் தேர்வாக இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் 20 வினாக்கள் ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ முறையிலும், 5 வினாக்கள் நியூமரிக்கல் விடையைக்கொண்டதாகவும் இருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்த மதிப்பெண்கள் 300. ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். விடையளிக்காத வினாவிற்கு மதிப்பெண் குறையாது. நியூமரிக்கல் விடையுள்ள வினாவிற்கு ஒவ்வொரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் தவறான மற்றும் விடையளிக்காத வினாவிற்கு மதிப்பெண் குறையாது.

* B.Arch படிப்புக்கு பகுதி I-ல் (கணிதம்) சரியான விடையைத் தேர்வு செய்யும் 20 வினாக்களும், நியூமரிக்கல்விடையுள்ள 5 வினாக்களும் இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் இப்பகுதிக்கு 100 மதிப்பெண்கள் உண்டு.பகுதி II (ஆப்டிடியூட்) ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 50 வினாக்கள். மொத்த மதிப்பெண்கள் 200.பகுதி III (வரைதல்) ஒரு வினாவிற்கு 50  மதிப்பெண்கள் வீதம் 2 வினாக்களுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.இத்தேர்வில் மொத்தம் 71 வினாக்களுக்கு மொத்த மதிப்பெண்கள் 400.இப்பகுதியில் ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறையும். நியூமரிக்கல் விடையுள்ள வினாவிற்கு மதிப்பெண் குறையாது. விடையளிக்காத வினாக்களுக்கு மதிப்பெண் குறையாது.

* B.Planning படிப்புக்கு பகுதி I-ல் (கணிதம்) சரியான விடையைத் தேர்வு செய்யும் விதத்தில் 20 வினாக்களும் 5 நியூமரிக்கல் விடையுள்ள வினாக்களும் இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்த மதிப்பெண்கள் 100 ஆகும்.

பகுதி II (ஆப்டிடியூட்) - 50 வினாக்கள் உண்டு. ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண்கள் வீதம் இப்பிரிவில் 200 மதிப்பெண்கள் உண்டு. பகுதி III (பிளானிங்) 25 வினாக்களுக்கு ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 100 மதிப்பெண்கள் உண்டு. மொத்தம் 100 வினாக்களுக்கு 400 மதிப்பெண்களாகும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறையும். நியூமரிக்கல் வினாக்களுக்கும், விடையளிக்காத வினாக்களுக்கும் மதிப்பெண் குறையாது.

தேர்வுகள் நடைபெறும் நாட்கள்

JEE Main - முதல் தேர்வு :  6.1.2020 (திங்கள்) - 11.1.2020 (சனி)
இரண்டாம் தேர்வு: 3.4.2020 (வெள்ளி) - 9.4.2020 (வியாழன்)
B.E/B.Tech : I அமர்வு 9.30AM to 12.30PM
II அமர்வு 2.30PM to 5.30PM
B.Arch : I அமர்வு 9.30AM to 12.30PM
II அமர்வு 2.30PM to 5.30PM
B.Planning :  2.30 PM to 5.30 PM
விண்ணப்பக் கட்டணம்
இந்தியா: 1) BE/B.Tech (or) B.Arch (or) B.Planning: General/Gents/OBC(NIL) - ஆண் 650/-  
வெளிநாடு - 3000/-
பெண் 325/- 1500/-
Sc/ST/PWD/Trans jender ஆண் 325/-  1500/-  பெண் 325/- 1500/-
2) BE/B.Tech & B.Arch (or) BE/B.Tech/
B.Planning (or) BE/B.Tech/ B.Arch &
B.Planning : SC/ST/PWD/Trans jender  - ஆண்650/-  3000/- பெண்-650/- 1500/-
விண்ணப்பக் கட்டணம் கிரெடிட், டெபிட், கார்டு, நெட்பேங், UPI, PAYTM வழியாகச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nta.ac.in அல்லது https://jeemain.nta.nic.in என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.9.2019.
அட்மிட் கார்டு 6.12.2019 அன்று கல்வி நிறுவனத்தின் என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய இயலும். தேர்வின் முடிவுகள் 31.1.2020 அன்று வெளியிடப்படும். இரண்டாம் தேர்விற்கான விண்ணப்பிக்கும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும்

X