ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டம் படிக்க NCHMCT JEE 2020 நுழைவுத்தேர்வு!

1/28/2020 2:46:28 PM

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டம் படிக்க NCHMCT JEE 2020 நுழைவுத்தேர்வு!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

*நுழைவுத் தேர்வு

தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் (National Council of Hotel Management and Catering Technology) மத்திய அரசின் சுற்றுலாத்துறையின்கீழ் இயங்கிவருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் B.Sc., Hospitality and Hotel Administration படிப்பிற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு NCHMCT JEE 2020 பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்துகிறது.

இப்படிப்பு Nchmct-யின் கீழே இயங்கும் 21 சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், 25 மாநில அரசின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், 1 பொதுத்துறை நிறுவனம், 24 தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் என நாடு முழுவதும் உள்ளன. இந்த மூன்றாண்டுப் படிப்பு NCHMCT மற்றும் இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம் இவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

இப்படிப்பு எதைப் பற்றியது?

இப்படிப்பு மாணவர்களுக்கு உணவக வரவேற்புத்துறை, உணவு உற்பத்தி, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு, சேவை, உணவக வரவேற்பு அறை செயல்பாடுகள், அலுவலகப் பராமரிப்பு, இவற்றுடன் உணவகக் கணக்கு, ஆவணங்கள், உணவுப் பாதுகாப்பு, உணவுத்தரம், மனிதவள நிர்வாகத் திட்டமிடல், பொருளாதார மேலாண்மை, கொள்கை வடிவமைப்பு, சுற்றுலா மேம்பாடு, சைவ, அசைவ உணவுகள் பற்றிய பாடங்களை முறையாகப் போதிக்கிறது.

இப்படிப்பிற்கான வாய்ப்புகள்

உணவகம் மற்றும் இது தொடர்பான துறைப் பயிற்சி, உணவகங்களில் சமையலறை மற்றும் பராமரிப்புப் பயிற்சி, விமான சமையலகம், விமான உணவுச் சேவை, இந்தியக் கப்பற்படை உணவுச் சேவை, விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் இவர்களுக்கான சேவை, மருத்துவமனை, மருத்துவ நிறுவனங்கள் உணவுச் சேவை, உணவக மேலாண்மை, ஃபுட் கிராஃப்ட் இன்ஸ்டிடியூட் இவற்றில் ஆசிரியர் பணி, உணவகம் மற்றும் இதர சேவைகளுக்குப் பணி விளம்பரம் மற்றும் இதர சேவைகள், தொடர்வண்டி உணவுச் சேவை, மாநிலச் சுற்றுலாத்துறை உணவுச் சேவை, பயணி மற்றும் வர்த்தகக் கப்பல்களில் உணவுச் சேவை, தங்கும் விடுதிகள் உணவு மேலாண்மை, உணவு தொடர்பான சுயதொழில்கள், உலகளாவிய நிறுவனங்களில் வரவேற்பு சேவை ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை இப்படிப்பு வழங்கும்.

விண்ணப்பிக்க தேவையான தகுதி

பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக உள்ள ஏதேனும் ஒரு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் General Certificate Education (GCE) Examination (London/Cambridge/Sri Lanka) at the Advanced (A) level, High School Certificate Examination of the Cambridge University, Any Public School/Board/University Examination in India or in a foreign country recognized by the Association of Indian Universities as equivalent to 10+2 pattern of Senior Secondary education, H.S.C.Vocational Examination approved by NCVT and SCVT of concerned state ஆகிய பாடத்திட்டங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

வயது வரம்பை பொறுத்தவரை ஜூலை 1, 1995 அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உச்ச வயதுவரம்பு 25 ஆண்டுகள். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு 28 ஆண்டுகளாகும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://nchm.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர்/நான்கிரிமி (OBC) ரூ.900, பொருளாதாரப் பின்னடைவு பிரிவினர் (Economicaly Weak up Secter-EWS) ரூ.700, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.450, மூன்றாம் பாலினத்தவர் ரூ.450 என விண்ணப்பக் கட்டணமாக டெபிட்/கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், PAYTM வழியாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை

இத்தேர்வு மூன்று மணி நேர, ஆன்லைன் தேர்வாகும். இத்தேர்வில், நியூமரிக்கல், எபிலிட்டி, அனாலிட்டிக்கல் ஆப்டிடியூடில் (Numerical Ability, Analitical Aptitude) 30 வினாக்கள், ரீசனிங், லாஜிக்கல் டிடக்ஷன் (Reasaning, Logical Deduction) 30 வினாக்கள், பொதுஅறிவு, தற்கால நிகழ்வுகள் (General Knowledge, Current Affairs) 30 வினாக்கள், ஆங்கிலம் (English) 60 வினாக்கள், சேவைக்கான நுண்ணறிவு (Aptitude for Service Sector) 50 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான இத்தேர்வில், சரியான ஒவ்வொரு விடைக்கும் 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறையும். விடையளிக்காத வினாவிற்கு மதிப்பெண் குறையாது.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் 20.3.2020 ; கட்டணம் செலுத்த கடைசி நாள் 21.3.2020 ; தேர்வு நடைபெறும் நாள் 25.4.2020 (நேரம்: 9.30 AM to 12.30 PM) ; தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள் 15.5.2020. மேலும் முழு விவரங்களை அறிய http://nchm.nic.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

முனைவர் ஆர். ராஜராஜன்

மேலும்

X