தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமோ தேர்வுத் தேதி அறிவிப்பு!

2/11/2020 4:52:25 PM

தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமோ தேர்வுத் தேதி அறிவிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமோ தேர்வுத் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதவுள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 19 வரை நடத்தப்படும். முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 முதல் 22 வரை நடத்தப்படும். மேலும் பாட வாரியான தேர்வு நாள் அட்டவணையை பற்றித் தெரிந்துகொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும்

X