ஒருங்கிணைந்த அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர IISER APTITUDE TEST 2020

2/14/2020 5:47:01 PM

ஒருங்கிணைந்த அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர IISER APTITUDE TEST 2020

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் செயல்பட்டுவருகிறது Indian Institute of Science Education and Research என்ற உயர்கல்வி நிறுவனம். இது பல்வேறு அறிவியல் பிரிவின் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளை வழங்கும் தன்னாட்சி நிறுவனமாகும். இதன் வளாகங்கள் பர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களில் உள்ளன.
   
வழங்கப்படும் படிப்புகள்:

நான்கு ஆண்டு காலம்கொண்ட B.S & B.S-M.S ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பல பாடப்பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
   
 *  உயிரியல் -  Biological Sciences

 *  வேதியியல்-Chemical Sciences
 
 *  விவரங்கள் அறிவியல்-Data Science
 
 *   புவி மற்றும் பருவமாற்ற அறிவியல்/புவி மற்றும் சுற்றுப்புறச்சூழல் அறிவியல் - Earth and Climate  Sciences / Earth and Environmental Sciences
 
 *  பொருளாதார அறிவியல் - Economic   Sciences
 
 *  பொறியியல் அறிவியல் (வேதியியல், விவரங்கள், மின் பொறியியல் & கணினி அறிவியல்) - Engineering   Sciences (Chemical, Data Science & Engineering, Electrical Engineering & Computer Science)
 
  *  புவிசார் அறிவியல் -Geological   Sciences
 
  * கணித அறிவியல் - Mathematical   Sciences
   
  * இயற்பியல் அறிவியல்- Physical   Sciences இவற்றில் பொறியியல் மற்றும் பொருளாதாரம் போபால் வளாகத்தில் மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது.
  

விண்ணப்பிக்கத் தகுதி
 
1) கிஷோர் வைக்ஞானிக் புரொசஹான் யோஜ்னா (Kishore Vaigyanik Protsahan Yojna (Kvpy) தேர்ச்சி பெற்றவர்கள்.
 
2) JEE Advanced வெற்றி பெற்றவர்கள்
 
3) State and Central Board (SCB) வழியாக நுழைவுத்தேர்வு எழுதியவர்கள்
 
1) கிஷோர் வைக்ஞானிக் புரொசஹான் யோஜ்னா  தேர்விற்கு விண்ணப்பித்து இத்தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
2) JEE- மெயின் (ஜனவரி), JEE- மெயின் (ஏப்ரல்) தேர்வை இரண்டையோ அல்லது இரண்டில் ஒன்றையோ விண்ணப்பித்து, தேர்ச்சி பெற்று பின் JEE- அட்வான்ஸ்டு எழுதி பொதுப்பிரிவினர் பொதுத் தரவரிசைப் பட்டியலில் (to Commun Rank List-CRL) 10,000-த்திற்குள்ளும், பிற பிற்படுத்தப்பட்ட, (நான் கிரிமி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் இதன் தரவரிசையில் 10,000-த்திற்குள் வரவேண்டும். +2 மதிப்பெண்களும் கருத்தில் ஏற்கப்படும்.

3) மேலே கூறப்பட்டுள்ள இரண்டு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்காவிட்டால், +2 அறிவியல் பிரிவில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்து பின் IISER நடத்தும் ஆப்டிடியூட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். +2வில் தேர்ச்சி பெற்று நுழைவுத்தேர்வு வழியாக விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்கள், பிற பிற்படுத்தப்பட்டவர் குறைந்தது 75 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 65 விழுக்காடும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கட் ஆஃப் கணக்கிட, ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண் என்று 5 பாடங்கள்(வேதியியல், இயற்பியல், உயிரியல் (அல்லது) கணிதம், ஏதேனும் ஒரு மொழி, வேறு பாடங்களென்றால் அதிக மதிப்பெண் பெற்ற பாடம்) மொத்தம் 500 மதிப்பெண்கள் இருத்தல் ஏற்கப்படும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
 
KVPY EXAM
 
விண்ணப்பம் துவக்கம்    :  24.4.2020
+2 மதிப்பெண் சமர்ப்பிக்க :  22.5.2020
அனுமதி                 :  1.6.2020
JEE-Advanced
விண்ணப்ப துவக்கம்   :  1.6.2020
+2 மதிப்பெண் சமர்ப்பிக்க :  10.6.2020
அனுமதி                : 11.6.2020
SCB (Aptitude TEST)
விண்ணப்ப துவக்கம்      :  23.3.2020
இறுதி நாள்            :  20.4.2020
அட்மிட் கார்டு          :  18.5.2020
+2 மதிப்பெண் சமர்ப்பிக்க : 22.5.2020
IISER தேர்வு நாள்   :  31.5.2020
தேர்வு முடிவுகள்    :  22.6.2020

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

இப்பட்டப்படிப்புகளில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் IISER-ன் இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.2000 மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்த நபர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். இத்தேர்விற்கு இந்திய குடிமக்கள், PIO (Person of Indian Office), ஓவர்சீஸ் இந்தியன் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: கணினி வழியான இத்தேர்வில் ஒரு பாடத்திற்கு 15 வினாக்கள் வீதம் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களிலிருந்து மொத்தம் 60 வினாக்கள் இருக்கும். ஒரு பாடத்திற்கு 45 என்று மொத்தம் 180 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். கணிதத்தில் செட், நம்பர் சிஸ்டம், ரிலேஷன், ஃபங்ஷன், ட்ரிக்னாமெட்ரி, புராபபலிட்டி, மேட்ரிக்ஸ் உள்ளிட்ட NCERT பாடங்கள் இருக்கும்.

இயற்பியல், டைனமேட்டிக்ஸ், எலக்ட்ரோஸ்டேட்டிங், தெர்மோடைனமிக்ஸ், ஆசிடேசன், எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸ், ஆப்டிக் உள்ளிட்ட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் இருக்கும். வேதியியலில் ஈடுலிபிரியா, ஹைட்ரஜன், S-பிளாக் எலிமண்டரி, P-பிளாக் எலிமண்டரி, சர்பேஸ் கெமிஸ்ட்ரி, பயோ மாலிக்கூல்ஸ் உள்ளிட்ட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் இருக்கும். உயிரியலில் பிளாண்ட்ஸ் பிசியாலஜி, ஹூயூமன் பிசியாலஜி, ரீபுரொடக் ஷன், ஜெனிட்டிக்ஸ், எவாலுயூஷன் உள்ளிட்ட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் இருக்கும். மேலும் முழு விவரங்கள் அறிய www.iiser என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும்

X