தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர CLAT 2020 பொது நுழைவுத் தேர்வு!

2/27/2020 3:28:57 PM

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர CLAT 2020 பொது நுழைவுத் தேர்வு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நாடு முழுவதும் 23 தேசிய சட்டக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இக்கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய, அகில இந்தியப் பொது நுழைவுத் தேர்வு (Common Law Admission Test-CLAT) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டுவருகிறது. அதாவது, 23 தேசிய பல்கலைக்கழகங்களிலுள்ள 2600 இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கும், 720 முதுநிலைப் பட்டப்படிப்பிற்கும் நடத்தப்படுகிறது. இம்முறை இத்தேர்வை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ராஞ்சி சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
   
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்:

1. National Law School of India University, Bangalore

2. National Law University, Delhi

3. National Academy of Legal Study & Research (NALSAR) University of Law, Hyderabad

4. The West Bengal National University of Juridical Sciences, Kolkata

5. National Law Institute University, Bhopal

6. National Law University, Jodhpur

7. Hidayatullah National Law University, Raipur

8. Gujarat National Law University, Gandhinagar

9. Dr.Ram Manohar Lohiya National Law University, Lucknow

10. Rajiv Gandhi National University of Law, Patiala

11. Chanakya National Law University, Patna

12. National University of Advanced Legal Studies, Kochi

13. National Law University Odisha, Cuttack

14. National University of Study & Research in Law, Ranchi

15. National Law University & Judicial Academy, Assam

16. Damodaram Sanjivayya National Law University (DSNLU) Visakhapatnam

17. The Tamil Nadu National Law School, Tiruchirapalli

18. Maharashtra National Law University, Mumbai

19. Maharashtra National Law University, Nagpur

20.Maharashtra National Law University, Aurangabad

21. Himachal Pradesh National Law University, Shimla

22. Dharmashastra National Law University, Jabalpur

23. Dr. B.R.Ambedkar National Law University Sonipat, Haryana

இளநிலைப் பட்டப்படிப்பில் சேர தகுதி

இளநிலைச் சட்டப் பட்டப்படிப்பில் சேர +2 அல்லது அதற்குச் சமமான படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்நாடு இந்தியக் குடிமக்கள் இவர்கள் குறைந்தது 45 விழுக்காடும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 விழுக்காடும் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரும் ஆண்டு இறுதித்தேர்வை எழுதவிருப்போரும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை.

நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்

இரண்டு மணி நேர நுழைவுத் தேர்வில் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான 150 வினாக்கள் இருக்கும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்வில் ஆங்கிலம், தற்கால நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு, லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிட்டேட்டிவ் டெக்னிக்ஸ் என்ற 5 பிரிவுகளில் வினாக்கள் இருக்கும்.

முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான தகுதி

முதுநிலைச் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், என்.ஆர்.ஐ., பி.ஐ.ஓ., ஓ.சி.ஐ. பிரிவினர் LLB அல்லது அதற்கு சமமான படிப்பில் குறைந்தது 50 விழுக்காடும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 45 விழுக்காடும் எடுத்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை.

நுழைவுத் தேர்வுப் பாடத்திட்டம்

இப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு 120 மணித்துளிகளுக்கானது. இத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவில் ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ முறையிலான 100 வினாக்கள் இருக்கும். ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.

இரண்டாவது பிரிவு விரிவான விடை தரவேண்டிய 20 வினாக்கள் இடம்பெறும். பிரிவு A-யில் பொதுப்பிரிவினர் 40 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 விழுக்காடும் எடுத்திருந்தால்தான் இரண்டாவது பிரிவு திருத்தப்படும்.
 
விண்ணப்பிக்கும் முறை

இப்பட்டப்படிப்புகளில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://consortiumofnlus.ac.in/clat-2020 என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், நான் ரெசிடென்ட், இண்டியன் (NRI), பர்சன்ஸ் ஆஃப் இண்டியன் ஆர்ஜின் (PIO), ஓவர்சீஸ் சிட்டிசன் (OCI) ரூ.4000, ஆதிதிராவிடர், பழங்குடியினர், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் ரூ.3500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
 
முக்கியமான நாட்கள்

* ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2020.

* நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 10.5.2020

* தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள்: 24.5.2020

மேலும் முழு விவரங்களை அறிய https://consortiumofnlus.ac.in/clat-2020 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும்

X