கட்டடக்கலை பட்டம் படிக்க NATA 2020 திறனறி தேர்வு

3/4/2020 3:49:24 PM

கட்டடக்கலை பட்டம் படிக்க NATA 2020 திறனறி தேர்வு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் இன்றளவும் விண்ணைத் தொட்டு நிற்கும் சோழ மாமன்னர் ராஜராஜன் கட்டிய பெரிய கோயில், அவர் மைந்தன் ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம், இன்னும் தமிழகத்தின் பல ஆலயங்கள், பல்லவ கட்டுமானங்கள், மொகலாய கால க் கட்டடங்கள், ஆங்கிலேய, பிரெஞ்சு கட்டடங்கள், எகிப்தின் பிரமிடுகள் இப்படி கட்டடக்கலைக்கு அழியாத சான்றுகள் பல உள்ளன.

நேட்டா திறனறி தேர்வு (NATA): இந்தியாவில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங் களில் இடம் பெற்றிருக்கும் ஐந்தாண்டு கால அளவிலான கட்டடக்கலைப் பட்டப் படிப்பில் (B.Arch) சேர்க்கை பெறுவதற்காகக் கட்டடக் கலைக்குழு (Council of Architecture) நடத்தும் தேசியக் கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வு (National Aptitude Test in Architecture - NATA 2020) அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது.

இத்தேர்வு ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படுகிறது. முதல் முறை ஏதேனும் ஒரு காரணத்தால் தேர்வு எழுத இயலாதவர்களும், பெற்ற மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள விரும்புகிறவர்களும் இரண்டாம் தேர்வை எழுத இயலும். இரண்டு தேர்வுகளையும் எழுதும்போது அந்த மதிப்பெண் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கல்வித் தகுதி

இந்தத் தேர்விற்கு, +2-வில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்கள் உள்ள பாடப்பிரிவைத் தேர்வு செய்து குறைந்தது 50% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பத்தாம் வகுப்புக்குப் பின்னால் கணிதம் ஒரு பாடமாக உள்ள மூன்றாண்டு பட்டயப் படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் இக்கல்வியாண்டில் இறுதித் தேர்வை எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆதிதிராவிடர், பழங்குடியினர்,  பிற  பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்குக் குறைந்தபட்சம் 5% மதிப்பெண் சலுகை உண்டு.

நேட்டா குறைந்தபட்ச மதிப்பெண்

தேர்வின் பகுதிA-ல் 125 மதிப் பெண்களுக்குக் குறைந்தது 32, பகுதி B-ல் 75 மதிப்பெண்களுக்கு 18 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 200 மதிப்பெண்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண்ணை பின்னர் கவுன்சில் நிர்ணயிக்கும்.

தேர்வு பற்றி

நேட்டா தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல்-16, மே-4 என்று இருமுறை நடத்தப்படவுள்ளது. முதல்முறை எழுதத் தவறியவர்களும், மீண்டும் எழுதி மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்புகிறவர்களும் இரண்டாம் முறை எழுதலாம். இத்தேர்வில் பகுதி A தேர்வு வரைதல் (Drawing), எழுத்துத் தேர்வாகும் (Pen and Paper Test). பகுதி B இயற்பியல், வேதியியல், கணிதம், பொது நுண்ணறிவு இவற்றை உள்ளடக்கிய ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ முறையிலான ஆன்லைன் தேர்வாகும்.

மதிப்பெண் திட்டம்:

பாடங்கள்    மதிப்பெண்    மதிப்பெண்

பகுதி - A Drawing (வரைதல்)    2x3 51 x 35 7055

பகுதி - B PCM (இயற்பியல், வேதியியல், கணிதம் ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண்15x1.5 22.5 ஜெனரல் ஆப்டிடியூட் & லாஜிக்கல் ரீசனிங்    35 x 1.5    52.5 மொத்தம் 200

வரைதல் பாடத்திட்டம் (Drawing Test)

வரைதல் தேர்வு என்பது 135 மணித்துளிகளில் மூன்று வினாக்கள் எழுத வேண்டும்.

* கொடுக்கப்பட்ட பொருளைச் சரியான அளவில், சரியான அமைப்பில் வரைதல்.

* பொருட்கள், பொருட்கள் உள்ள சூழல் இவற்றின்மீது படும் ஒளி, அவற்றின் நிழல் இவற்றை வரைதல்.

* கட்டடங்கள், மற்றும் வடிவங்கள் இவற்றின் முப்பரிமாணம்.

* கொடுக்கப்பட்ட  வடிவங்கள் இரு பரிமாண அமைப்பு.

* நிறங்களைச் சரியாகப் பொருட்களுக்குத் தீட்டுதல்.

* அளவு, பரிமாணப் பொருத்தம்.

* அன்றாட நிகழ்வுகள், காட்சிகள் இவற்றை பென்சில் கொண்டு வரைந்து அவற்றைச் சோதிக்கும் வகையில் அமையும். மாணவர்கள் வரைந்ததன் கற்பனையை உற்றுநோக்கி அவற்றைச் சோதிக்கும் வகையில் இத்தேர்வு அமையும். இயற்பியல், வேதியியல், கணிதம், பொது நுண்ணறிவு இது சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான ஆன்லைன் தேர்வாகும். இவற்றுக்கான பாடத் திட்டங்களைப் பார்ப்போம்…

Physics: Electrostatics- Electric charges and Fields; Electrostatic Potential and Clearance Current Electricity; Magnetic Effects of Current and Magnetism; Moving Charges and magnetism; Magnetism and Matter Electromagnetic Induction and Alternating currents- Electromagnetic Induction; Alternating Current Optics- Ray optics and optical instruments, Wave Optics Dual nature of radiation and Matter Atoms and Nuclei-Atoms, Nuclei Electronic devices-Semiconductor Electronics, Materials, Devices and Simple circuits.

Chemistry: Some Basic Concepts of Chemistry; Structure of Atom; Classification of Elements and Periodicity in Properties Chemical Bonding and Molecular; States of Matter: Gases and Liquids Chemical Thermodynamics; Equilibrium; Redox Reactions; Hydrogen; s-Block Elements p-Block Elements Organic Chemistry: Some basic Principles and Techniques; Hydrocarbons; Environmental Chemistry.

Mathematics: Algebra, Logarithms, Matrices, Trigonometry, Coordinate Geometry, 3-dimensional coordinate geometry, Application of calculus, Permutation & Combination, Statistics & Probability General Aptitude: Objects, texture related to architecture and the built environment. Interpretation of pictorial compositions,Visualizing three-dimensional objects from two-dimensional drawing. Visualizing different sides of 3D objects. Analytical reasoning, mental ability (visual, numerical and verbal), General awareness of national/international architects and famous architectural creations.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.nata.in என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு தேர்வை எழுத விரும்பும் பொதுப்பிரிவினர் ரூ.2000, இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புபவர்கள் ரூ.3,800 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஒரு தேர்விற்கு ரூ.1700, இரு தேர்வுகளுக்கும் ரூ.3,100 செலுத்த வேண்டும். அயல்நாட்டினர் ஒரு தேர்வுக்கு ரூ.10,000, இரு தேர்வுக்கு ரூ.18,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் வழியாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: முதல் தேர்விற்கு 16.3.2020 வரை, இரண்டாம் தேர்வுக்கு 4.5.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களுக்கு www.nata.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும்

X