JIPMER-லும் மருத்துவம் படிக்க NEET தேர்வு

3/4/2020 3:50:49 PM

JIPMER-லும் மருத்துவம் படிக்க NEET தேர்வு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் நீட் தேர்வு இல்லாமல், அந்தக் கல்வி நிறுவனம் சார்பில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுவந்தது. இருப்பினும், 2020ம் கல்வியாண்டு முதல் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 2020ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அவற்றில் 150 இடங்கள் புதுச்சேரி, 50 இடங்கள் காரைக்கால் ஆகும். இந்த 2020 கல்வியாண்டு முதல் 50 மருத்துவ இடங்கள் கூடுதலாக்கப்பட்டு, 250 சீட் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், சான்றிதழ் படிப்பு, முதுநிலை அடிப்படைப் பட்டயப்படிப்பு, பிஹெச்.டி., இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளது.

மேலும்

X