இணையப் பயன்பாட்டில் சென்னைக்கு 5வது இடம்

12/18/2015 2:46:23 PM

இணையப் பயன்பாட்டில் சென்னைக்கு 5வது இடம்

நன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

 

இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையம் பயன்படுத்துவதாக Internet and Mobile Association of India (IAMAI) அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் அதிக இணையப் பயனாளிகளைக் கொண்ட நகரமாக மும்பை இடம் பெற்றுள்ளது. 1.64 கோடி மக்கள், மும்பையில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தலைநகர் டில்லி 1.21 கோடி மக்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவதாக, இந்தியாவில் சந்தோஷ நகரம் என்று அழைக்கப்படும் கொல்கத்தா உள்ளது. இங்கு இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 62.7 லட்சமாகும். தகவல் தொழில் நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு 59.9 லட்சம் இணைய மக்களைப் பெற்றுள்ளது. தொழில் நகரமான சென்னை 55.8 லட்சம் இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது.

X