இந்தியச் சட்டக்கல்வி நிறுவனம் வழங்கும் இணையவழிச் சான்றிதழ் படிப்புகள்!

8/21/2017 3:16:53 PM

இந்தியச் சட்டக்கல்வி நிறுவனம் வழங்கும் இணையவழிச் சான்றிதழ் படிப்புகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியச் சட்டக்கல்வி நிறுவனம் (The Indian Law Institute) புதுடெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் இணையக் காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (Intellectual Property Rights and Information Technology in the Internet Age) மற்றும் மின்வழிச்சட்டம் (Cyber Laws) எனும் மூன்று மாத கால அளவிலான இரண்டு சான்றிதழ் படிப்புகளை இணைய வழிப் பயிற்சியாக (Online Courses) வழங்குகிறது. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அறிவுசார் சொத்துரிமைகள்: அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் இணையக் காலத்தில் தகவல் தொழில்நுட்பம் பற்றிய பயிற்சியில் புத்தாக்கங்கள் (Patents), காப்புரிமை மற்றும் அண்டைப் பகுதி உரிமைகள் (Copyright and neighbouring rights), வணிகக் குறியீடுகள், நிலவியல் குறியீடுகள் மற்றும் திரளப் பெயர்கள்  (Trademarks, Geographical Indications and Domain Names), அறிவுசார் சொத்துரிமைகளுக்கான உரிமைகள் (Management of Intellectual Property Rights) உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

மின்வழிச் சட்டம்: மின்வழிச்சட்டம் குறித்த பயிற்சியில் மின்வழி உலகம் மற்றும் மின்வழிச் சட்டம் அறிமுகம் (Introduction to the Cyber World and Cyber Law), கட்டமைப்புக் கட்டுப்பாடுகள் (Regulatory Framework), மின்வழிக் குற்றங்கள் (Cyber Crimes), மின் வணிகம் (E-Commerce) போன்ற பாடங்கள் முதன்மைப் பாடங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

பயன்கள்: இப்பயிற்சி மாணவர்கள் (Students), வழக்கறிஞர்கள் (Lawyers), சுங்கம், காவல்துறை உள்ளிட்ட சட்டச் செயலாக்கப் பணிகளில் இருப்பவர்கள் (Law enforcement personnel), புத்தாக்க முகவர்கள் (Patent agents), அறிவுசார் சொத்துரிமைகளுக்கான அரசுப்பணி அலுவலர்கள் (Intellectual Property Offices in Government Sector), பொறியாளர்கள் (Engineers), அறிவியலாளர்கள் (Scientists), மென்பொருள் வல்லுநர்கள் (Software Professionals), நிறுவனச் செயல் அலுவலர்கள் (Company Executives), பொருளாதார வல்லுநர்கள் (Economists) மற்றும் இதழியலாளர்கள் (Journalists) போன்றவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

கல்வித்தகுதி: +2 படிப்பிற்குப் பின்பு பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் என்று அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்குக் கூடுதலாகக் கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவதில் நல்ல திறனிருக்க வேண்டும். மேற்காணும் இரு பயிற்சிகளில் ஒரே சமயத்தில் ஏதாவதொன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியச் சட்டக்கல்வி நிறுவனத்தின் http://ili.ac.in எனும் இணையதளத்திலிருந்து பயிற்சிக்கான விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பயிற்சிக் கட்டணமாக ரூ.7500ஐ ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை நிரப்பி இந்நிறுவன இணைய வழிப் பயிற்சிப் பிரிவின் e_ipr@ili.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை அஞ்சல் வழியாக அனுப்ப விரும்புவோர் ‘The Indian Law Institute’ எனும் பெயரில் புதுடெல்லியில் மாற்றிக்கொள்ளக்கூடியவாறு வங்கி வரைவோலையாகப் பெற்று இணைத்து ‘The Registrar, Indian Law Institute, Bhagwan Das Road, New Delhi-110001’ எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசிநாள்: 24.8.2017.

மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்தவர்களில் உரிய தகுதியுடையவர்கள் அனைவருக்கும் மாணவர் சேர்க்கை அளிக்கப்படு
வதுடன். அவர்களுக்கு 1.9.2017 முதல் இணையம் வழியிலான பயிற்சிகள் தொடங்கும். இப்பயிற்சிக்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது இந்நிறுவனத்தின் இணைய வழிச் சான்றிதழ் படிப்புகளுக்கான பிரிவுக்கான 011- 23073295 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.
 
- முத்துக்கமலம்

X