ராணுவ மையத்தில் குருப் சி பணியிடங்கள்

1/9/2017 12:37:15 PM

ராணுவ மையத்தில் குருப் சி பணியிடங்கள்

பஞ்சாப் மாநிலம், லூதியானா ராணுவ மையத்தில் 115 குருப் ‘சி’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Tradesman Mate:

97 இடங்கள் (பொது - 57, ஒபிசி - 30, எஸ்சி - 10). 10 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 இடங்கள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

2. Fireman:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

3. Material Assistant:

7 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1, எஸ்சி - 2). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

4. Lower Division Clerk:

10 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 3, எஸ்சி - 2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

எழுத்துத்தேர்வு, உடல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Colonel Commandant,
17 FAD,
PIN: 909717.
C/O 56 APO.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.1.2017.

X