தொலைத் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை

1/9/2017 12:46:03 PM

தொலைத் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள தொலைத் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் 17 குருப் ‘பி’ மற்றும் குருப் ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

மொத்த இடங்கள்:

17.

1. Senior Accountants (Group B Non-Gazetted):

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

மத்திய, மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது லோயர் டிவிசன் கிளார்க்காக 8 ஆண்டுகளுக்கு குறையாமலும், அப்பர் டிவிசன் கிளார்க்காக 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் பணியாற்றியிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

2. Junior Accountants (Group C):

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் ரூ.2,800.

தகுதி:

மத்திய, மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியிருக்க வேண்டும். ஜூனியர் அக்கவுன்டென்ட் அல்லது ஆடிட்டராக 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது:

16.1.2017 அன்று 56க்குள்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dot.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Joint Controller-I,
Office of the Controller of Communication Accounts,
Dept., of Telecommunications,
Rajasthan Telecom Circle,
Old CTTC Building,
Jhalana Doongri, Jaipur.
Rajasthan.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.1.2017.

X