பிஎஸ்சி, பிஇ பட்டதாரிகளுக்கு மும்பை கடற்படை தளத்தில் 121 காலியிடங்கள்

1/9/2017 12:48:46 PM

பிஎஸ்சி, பிஇ பட்டதாரிகளுக்கு மும்பை கடற்படை தளத்தில் 121 காலியிடங்கள்

இந்திய கடற்படைக்கு சொந்தமான மும்பை கடற்படை தளத்தில் 121 சார்ஜ்மேன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

CHARGEMAN (Group B Non Gazetted, Non-Industrial) Group B.

மொத்த காலியிடங்கள்:

121 (பொது - 66, ஒபிசி - 35, எஸ்சி - 14, எஸ்டி - 6).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

துறைவாரியாக காலியிடங்கள் விவரம்:

1. Engineering:

33 இடங்கள் (பொது - 19, ஒபிசி - 7, எஸ்சி - 4, எஸ்டி - 3). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2. Electrical:

14 இடங்கள் (பொது - 8, ஒபிசி - 3, எஸ்சி - 2, எஸ்டி - 1). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

3. Weapon:

8 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 2). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

4. Construction:

24 இடங்கள் (பொது - 12, ஒபிசி - 10, எஸ்சி - 2). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

இயற்பியல்/ வேதியியல்/ கணிதம் பாடப்பிரிவில் பிஎஸ்சி பட்டம் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை:

ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கு Physics/ Chemistry/ Maths/ Engineering/ Management/ Supervisory Skills/ General Knowledge/ General English பாடப்பிரிவுகளில் இருந்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்படும்.

தகுதியானவர்கள் www.jobsuchi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.1.2017.

X