சட்டம், பட்டப்படிப்பு தகுதிக்கு விஜயா வங்கியில் மேலாளர் ஆகலாம் 44 பணியிடங்கள் உள்ளன

1/9/2017 12:52:03 PM

சட்டம், பட்டப்படிப்பு தகுதிக்கு விஜயா வங்கியில் மேலாளர் ஆகலாம் 44 பணியிடங்கள் உள்ளன

கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியில் Probationary Manager (Security) உள்ளிட்ட 44 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Probationary Manager (Security):

20 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 5, எஸ்சி - 3, எஸ்டி - 2).

வயது:

1.10.16 அன்று 20 முதல் 45க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படையில் கமிஷன்டு ஆபீசராக 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது காவல்துறையில் ஏஎஸ்பியாகவோ, டிஎஸ்பியாகவோ அல்லது துணை ராணுவப் படையிலோ 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.31,705 - 45,950.

2. Probationary Manager (Rajbhasa):

10 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1, எஸ்டி - 2).

வயது:

1.10.2016 அன்று 20 முதல் 35க்குள்.

தகுதி:

இந்தி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதோடு பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது சம்ஸ்கிருதத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதோடு ஆங்கிலம் மற்றும் இந்தியை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலோ, பொதுத்துறை வங்கிகளிலோ குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.31,705 - 45,950.

3. Probationary Manager-Law:

14 இடங்கள் (பொது - 7, ஒபிசி - 4, எஸ்சி - 2, எஸ்டி - 1). இவற்றில் ஓரிடம் பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதி:

முழுநேர பி.எல் அல்லது எல்எல்பி மற்றும் 5 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் 3 ஆண்டுகள் சிவில் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்திருக்க வேண்டும். படிப்பு.

வயது:

1.10.2016 அன்று 20 முதல் 35க்குள்.

வயது வரம்பு சலுகை:

ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

தகுதியானவர்கள் www.vijayabank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

Vijaya Bank,
P.O. Box.No.5136,
G.P.O.
Bangalore- 560001.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.1.17.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 16.1.17.

X