சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமா!

4/20/2017 12:10:24 PM

சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமா!

நிறுவனம்:

ஓரியண்டல் வர்த்தக வங்கி

வேலை:

சிறப்பு அதிகாரி பணி

காலியிடங்கள்:

120.

முதுநிலை மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் போன்ற பதவிகள் உள்ளன. உதவி மேலாளர் பணிக்கு மட்டுமே 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி:

சி.ஏ படித்து அனுபவம் உள்ளவர்கள் முதுநிலை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ படித்துவிட்டு அனுபவம் இல்லாதவர்கள் மேலாளர் பணிக்கும், எம்.பி.ஏ (நிதி) அல்லது சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ, சி.எஃப்.ஏயில் முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் ஓ.பி,சி பிரிவினர் ரூ.600ம், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் ெசலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:

உதவி மேலாளர் பணிக்கு 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு 23 முதல் 35 வயதிற்குள்ளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 25 முதல் 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:  

முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். உதவி மேலாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26-4-2017

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: www.obcindia.co.in இணையதளத்தைப் பார்க்கலாம்.

X