வங்கியில் அதிகாரி பணி வேலை வேண்டுமா?

4/20/2017 12:14:39 PM

வங்கியில் அதிகாரி பணி வேலை வேண்டுமா?

நிறுவனம்:

பரோடா வங்கி

வேலை:

புரபெசனரி அதிகாரி பணி

காலியிடங்கள்:

400. பொதுப் பிரிவினருக்கு 201 இடங்கள், ஓ.பி.சியினருக்கு 108 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 60 இடங்கள் மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 30 இடங்கள் என ஒதுக்கீடு அடிப்படையில் உள்ளன. அதிகாரி பணியிடங்கள் பயிற்சிக்கு பிறகுதான் நிரப்பப்படும். பரோடா மணிப்பால் ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தில் வங்கிப் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தான் அதிகாரியாகத் தேர்வு செய்யப் படுவார்கள். பயிற்சிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் திறமை படைத்தவர்கள் ேதர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

பட்டப்படிப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று றிருக்க வேண்டும். எஸ்.சி. எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50% மதிப்பெண் பெற்றிருந்தால்
போதுமானது.  

வயது வரம்பு:

20 முதல் 28 (1-4-2017) ம் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1-5-2017 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.750ம் எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100ம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வங்கியின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.bankofbaroda.co.in இணையதளத்தைப் பார்க்கலாம்.

X