ஜேஇஇ தேர்ச்சி பெற்றவர்கள் பி.டெக்., படித்து கடற்படையில் சேரலாம்

6/19/2017 2:10:33 PM

ஜேஇஇ தேர்ச்சி பெற்றவர்கள் பி.டெக்., படித்து கடற்படையில் சேரலாம்

இந்திய கடற்படையில் இலவசமாக 4 வருட பி.டெக்., பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2 Cadet (B.Tech) Entry Schemeல் சேருவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 படித்த திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JEE (2017) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

பணி:

10+2 Cadet (B.Tech) Entry Scheme.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 2.7.1998க்கும் 1.1.2001க்கும் இடையில் (இரு தேதிகள் உட்பட) பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி:

பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி. 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வில் ஆங்கிலத்தில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதிகள்:

குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். உயரம், வயதிற்கேற்ற எடை.

விண்ணப்பதாரர்கள் JEE (Main)-2017 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு ஜூலை - அக்டோபர் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில் கோவை, விசாகப்பட்டினம், பெங்களூர், போபால் ஆகிய இடங்களில் 2 கட்டங்களாக நடைபெறும். 2 கட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கேரளா, எழிமலாவிலுள்ள கடற்படை அகாடமியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 4 வருடம் பி.டெக்., பயிற்சியளிக்கப்படும். ஜனவரி 2018ல் பயிற்சி தொடங்கும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு பி.டெக்., பட்டம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2017.

X