இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜுனியர் அசிஸ்டென்ட் வேலை

7/13/2017 12:25:40 PM

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜுனியர் அசிஸ்டென்ட் வேலை

நிறுவனம்:

இந்திய விமான நிலைய ஆணையம்

வேலை:

ஜுனியர் அசிஸ்டென்ட், தீயணைப்புத் துறை, கொல்கத்தா விமான நிலையம்

காலி இடங்கள்:

105

வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி,சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுத் தளர்வுண்டு. 30.6.2017 தேதி அடிப்படையில் வயது கணக்கிடப்படும்.

கல்வித் தகுதி:

10ம் வகுப்புத் தேர்ச்சியுடன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு போன்ற பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 வகுப்பில் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் ஜுலை 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு இந்தக் கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு.

கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: ஜுலை 21.

கூடுதல் தகவல்களுக்கு : www.aai.aero