கிராமிய வங்கியில் அதிகாரி பணி!

7/13/2017 12:38:30 PM

கிராமிய வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்:

Institute of Banking Personal Selection (I.B.P.S)

வேலை:

மண்டல கிராமிய வங்கிகளுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பணிகள்

காலி இடங்கள்:

14192

வயது வரம்பு:

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகாரி பணிக்கு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 1.7.2017 தேதி அடிப்படையில் கணக்கிடப்படும்.

கல்வித் தகுதி:

அலுவலக மற்றும் ஸ்கேல் 1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தி இருக்க வேண்டும். அதிகாரி பணியில் ஸ்கேல் 2 (2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்) மற்றும் ஸ்கேல் 3 (5 ஆண்டு அனுபவம் பெற்றி இருக்க வேண்டும்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், 50 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி போன்ற பொறியியல் படிப்பு, சி.ஏ, சட்டம், எம்.பி.ஏ நிதி மற்றும் எம்.பி.ஏ மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

பொது ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் பதிவு ஜுலை 12ம் தேதி தொடங்குகிறது. எஸ்.சி; எஸ்.டி பிரிவினர் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100ம் மற்றவர்களுக்கு ரூ.600 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு : www.ibps.in

X