பட்டதாரிகளுக்குப் புலனாய்வுத் துறையில் வேலை!

9/5/2017 5:46:47 PM

பட்டதாரிகளுக்குப் புலனாய்வுத் துறையில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய புலனாய்வுத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான உதவிப் புலனாய்வு அதிகாரி, கிரேடு-II காலியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்கள் 1430 நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினியில் பயிற்சி பெற்றிருந்தால், முன்னுரிமை வழங்கப் படும்.

வயது வரம்பு: 18-27. அரசு விதிகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் இணையதளம் மூலமாக செப்டம்பர் 2 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mha.nic.in/sites/upload_files/mha/files/DetailedAdvtforACIO-II_11082017%20exam.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.