இந்திய உணவு கழகத்தில் 82 காலியிடங்கள்

9/12/2017 5:37:53 PM

இந்திய உணவு கழகத்தில் 82 காலியிடங்கள்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள82 வாட்ச்மேன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

Watchman.  

82 இடங்கள் (பொது-42, எஸ்சி-18, எஸ்டி-4, ஒபிசி-18 ) இவற்றில் மாற்றுத்திறனாளிகள்-6, முன்னாள் ராணுவத்தினர்-20 ஆகிய இடங்கள் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.8,100- 18,070.

வயது வரம்பு:

1.8.2017 அன்று 18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி. எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.300/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். www.fciwbjobs.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.9.2017.