ஐஏஎஸ், ஐஎப்எஸ் முதல்நிலை தேர்வுகள் அறிவிப்பு: பட்டப்படிப்பு தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்

3/6/2018 2:32:32 PM

ஐஏஎஸ், ஐஎப்எஸ் முதல்நிலை தேர்வுகள் அறிவிப்பு: பட்டப்படிப்பு தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுத்துறையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமை பணிகளில் அடங்கிய சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனத்துறை தேர்வு பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய முதல்நிலை தேர்வுக்கு (Preliminary Examination) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், வனத்துறை அதிகாரி பணிக்கும் ஒரே முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் ஒரு துறையையோ அல்லது இரண்டையுமோ தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு (Main Exam) தனித்தனியாக நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலியிடங்களை பொறுத்து பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தியா முழுவதும் 72 இடங்களில் ஜூன் 3ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களிலும் புதுச்சேரியிலும் முதல்நிலை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தகுதி போதுமானது.

வயது, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட பிற விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.03.2018.

X