சென்னை உயர்நீதிமன்ற உதவியாளர் வேலை!

4/16/2018 2:51:30 PM

சென்னை உயர்நீதிமன்ற உதவியாளர் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

சென்னை உயர் நீதிமன்றம்

வேலை:

உதவியாளர் பணி

காலியிடங்கள்:

நீதிபதிகளின் தனி உதவியாளர் 71, பதிவாளர்களுக்கான உதவியாளர் 10, துணைப் பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் 1. மொத்தம் 82 இடங்கள்.

கல்வித் தகுதி:

நீதிபதிகளுக்கான தனி உதவியாளர் பிரிவுக்கு, பட்டப் படிப்புடன், முதுநிலை ஆங்கிலத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளருக்கான தனி உதவியாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலைத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மூன்று பிரிவுக்குமே கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு:

18 - 30

தேர்வுமுறை:

‘ஸ்கில் டெஸ்ட்’ மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 4.5.2018

மேலதிக தகவல்களுக்கு: www.hcmadras.tn.nic.in

தொகுப்பு: வெங்கட்

X