முத்திரைத்தாள் அச்சகத்தில் உதவியாளர் பணிகள்

4/17/2018 2:20:38 PM

முத்திரைத்தாள் அச்சகத்தில் உதவியாளர் பணிகள்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள 35 ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டென்ட் இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

Junior Office Assistant :

35 இடங்கள் (பொது-17, ஒபிசி-8, எஸ்சி-7, எஸ்டி-3).

சம்பளம்:

ரூ.8,350-20,470.

வயது வரம்பு:

18 முதல் 28க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் http://www.spmcil.com/Interface/Home.aspx என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.5.2018.

X