இந்தியன் ஆயில்கழகத்தில் 58 பணியிடங்கள்

6/11/2018 12:31:09 PM

இந்தியன் ஆயில்கழகத்தில் 58 பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Operator Grade I:

25 இடங்கள் (பொது-15, ஒபிசி-7, எஸ்சி-3)

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/மெஷினிஸ்ட்/பிட்டர் டிரேடில் 2 வருட ஐடிஐ முடித்து ஒரு வருட பணி அனுபவம்.

2. Junior Operator (Aviation) Grade I:

33 இடங்கள் (பொது-21, ஒபிசி-7 எஸ்சி-5).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவம்.

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கான சம்பளம்:

ரூ.10,500-24,500.

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கான வயது:

18 முதல் 26க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு, திறனறி தேர்வு, உடற்தகுதியின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கு Generic Aptitude, Quantitative Aptitude, Reasoning Ability, Basic English மற்றும் டெக்னிக்கல் பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.6.2018.

X