கனநீர் வாரியத்தில் 209 காலியிடங்கள்

6/11/2018 12:39:23 PM

கனநீர் வாரியத்தில் 209 காலியிடங்கள்

மும்பை அணுசக்தி கழகத்தின் கனநீர் வாரியத்தில் 209 இடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ/டிப்ளமோ/ பிஎஸ்சி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Category-I Stipendiary Trainee:

70 இடங்கள் (பொது-28, ஒபிசி-25, எஸ்சி-10, எஸ்டி-7). (கெமிக்கல்-35, மெக்கானிக்கல்-16, எலக்ட்ரிக்கல்-8, கெமிஸ்டிரி- 8, பயோ சயின்ஸ்-3)

சம்பளம்:

ரூ.44,900.

வயது:

18 முதல் 24க்குள்.

கல்வித்தகுதி:

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

2. Category-II Stipendiary Trainee:

139 இடங்கள் (பொது-70, ஒபிசி-41, எஸ்சி-17, எஸ்டி-11). (Process/Plant Operator-60, Electrical-28, Mechanical (Fitter)-34, Turner-4, Machinist-5, Welder-6, Draughtsman (Civil/Mechanical)-2.

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

18 முதல் 22க்குள்.

சம்பளம்:

ரூ.21,700-25,500.

எழுத்துத்தேர்வு, டிரேடு/ஸ்கில்டு தேர்வு, உடற்தகுதி மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.hwb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2018.

X